வளர்ந்து வரும் பிரான்சைஸ் கிரிக்கெட் தொடர்களால் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்கள் குறைந்த காலங்களிலேயே தங்களது ஓய்வினை அறிவித்துவிட்டு வெளிநாட்டு தொடர்களில் பங்கேற்று வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் இந்த ஆண்டில் மட்டும் மொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து 22 வீரர்கள் தங்களது ஓய்வினை அறிவித்து இருக்கின்றனர். இதில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என முன்னணி வீரர்களும் அடக்கம்.
இதில் குறிப்பிடத்தக்கவிதமாக இந்தியாவின் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்ற நிலையில் தங்களது ஓய்வினை டி20 ஃபார்மெட்டில் மட்டும் அறிவித்தனர். மேலும் இந்தியாவின் தினேஷ் கார்த்திக் சமீபத்தில் அனைத்து ஃபார்மெட்டில் இருந்தும் தனது ஓய்வை அறிவித்தார்.
இவரைத் தவிர மற்ற இந்திய வீரர்களான சௌரப் திவாரி, வருண் ஆரோன், கேதார் ஜாதவ், ஷிகர் தவன், ஸ்ரான் ஆகிய அனைவரும் அனைத்து ஃபார்மேட் தொடர்களில் இருந்தும் தங்களது ஓய்வை அறிவித்திருக்கின்றனர். இங்கிலாந்து அணியை பொறுத்த வரை கடந்த சில நாட்களுக்கு முன்பாக மொயின் அலி மற்றும் டேவிட் மலான் ஆகியோர் அனைத்து பார்மெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கின்றனர்.
மேலும் இங்கிலாந்து அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் அனைத்து பார்மெட்டில் இருந்தும் ஓய்வு பெற்று இருக்கிறார். தென் ஆப்பிரிக்கா அணியை பொறுத்தவரை டீன் எல்கர் அனைத்து ஃபார்மெட்டில் இருந்தும் ஹென்றிக் கிளாஸன் டெஸ்ட் பார்மெட்டில் இருந்தும் ஓய்வினை அறிவித்திருக்கிறார்கள்.
மேலும் ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான டேவிட் வார்னர் அனைத்து வடிவத்தில் இருந்தும் ஓய்வு அறிவித்திருக்கிறார். மேலும் இவர்களைத் தவிர மற்ற நாட்டு வீரர்களுடன் சேர்த்து மொத்தமாக 22 பேர் தங்களது ஓய்வு முடிவினை அறிவித்து இருக்கிறார்கள்.
இதையும் படிங்க:15 வருஷமா டி20 ஆடுறோம்.. அந்த ஒரு தோல்வி மாதிரி நாங்க எதுவுமே பார்க்கல – பாக் இமாத் வாசிம் ஆதங்கம்
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற 22 கிரிக்கெட் வீரர்கள் :
இந்தியா – விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, ரோஹித் சர்மா (டி20 ஃபார்மேட்) கேதார் ஜாதவ் தினேஷ் கார்த்திக், வருண் ஆரோன், சௌரப் திவாரி, சிகார் தவான், ஸ்ரான் ( ஆல் ஃபார்மேட் ) ஆஸ்திரேலியா – டேவிட் வார்னர், வில் புகோவ்ஸ்கி ( ஆல் ஃபார்மேட் ), இங்கிலாந்து – ஜேம்ஸ் ஆண்டர்சன், மொயின் அலி, டேவிட் மலான் ( ஆல் ஃபார்மேட்) நியூசிலாந்து- நீள்வாக்னர், காலில் முன்ரோ ( ஆல் ஃபார்மேட் ) தென் ஆப்பிரிக்கா – டீன் எல்கர் ( ஆல் ஃபார்மேட் ), ஹென்றி கிளாசன் – (டெஸ்ட் தொடர் ) வெஸ்ட் இண்டீஸ் – ஷேனோன் கேப்ரில் ( ஆல் ஃபார்மேட் ), உகாண்டா- பிரைன் மசாபா (டி20), நெதர்லாந்து – ஸிப்ரான்ட் ( ஆல் ஃபார்மேட் ), நமீபியா – டேவிட் வைஸ் ( ஆல் ஃபார்மேட் )