151.6 கிமீ.. இதுவரை ஐபிஎல் 2025ல் வீசப்பட்ட 5 வேகப்பந்துகள்.. முழு பட்டியல்

0
302

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 5 முறை சாம்பியன் அணிகளான சிஎஸ்கே மற்றும் மும்பை ஆகிய இரு அணிகளும் அடுத்தடுத்து 2 தோல்விகளை பெற்றிருக்கிறது. இதனால் டெல்லி, ஆர்சிபி உள்ளிட்ட அணிகள் புள்ளிப் பட்டியலில் முன்னிலை வகித்து வருகின்றன. இதனால் சோசியல் மீடியாவே கலவரமாக மாறி இருக்கிறது.

முதலிடத்தில் யார்?

அதேபோல் ஒவ்வொரு போட்டியிலும் சிக்ஸ், பவுண்டரி என்று பேட்ஸ்மேன்கள் பவுலர்களை வேட்டையாடி வருகின்றனர். லோ ஸ்கோரிங் ஆட்டமாக ஒரேயொரு ஆட்டம் மட்டுமே நடந்திருப்பதால், ரசிகர்கள் மத்தியில் அயர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் அதிகமாக வீசப்பட்ட பந்துகள் எவை என்று ரசிகர்கள் தேடி வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் குஜராத் அணிக்காக ஆடி வரும் ககிசோ ரபாடா தான் இதுவரை அதிக வேகத்தில் பவுலிங் செய்துள்ளார். அவர் வீசிய ஒரு பந்து 151.6 கிமீ வேகத்தில் சென்றிருக்கிறது. பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின் போது, இந்த பந்தை வீசி உள்ளார். அதேபோல் 2வது இடத்தில் குஜராத் அணியின் முகமது சிராஜ் இருக்கிறார். மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் வீசிய ஒரு பந்து 149.6 கிமீ வேகத்தில் சென்றிருக்கிறது.

மாஸ் காட்டிய பதிரானா

3வது இடத்தில் சிஎஸ்கே அணிக்காக ஆடி வரும் பதிரானா இருக்கிறார். ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் அவர் 149.5 கிமீ வேகத்தில் வீசி இருக்கிறார். அதேபோல் ஆர்ச்சர் 149.1 கிமீ வேகத்தில் வீசி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து ஆர்ச்சர், பதிரானா மற்றும் ரபாடா ஆகிய மூவருமே இடம்பெற்றுள்ளனர்.

- Advertisement -

அதேபோல் கொல்கத்தா அணிக்காக அதிகபட்ச வேகத்தில் வீசிய பவுலராக ஸ்பென்சர் ஜான்சன், ஐதராபாத் அணிக்காக பேட் கம்மின்ஸ், டெல்லி அணிக்காக மிட்சல் ஸ்டார்க் ஆகியோர் அந்தந்த அணிகளுக்காக அதிக வேகத்தில் வீசி இருக்கிறார்கள். இதுவரை 11 போட்டிகள் மட்டுமே முடிவடைந்துள்ள நிலையில், அடுத்து வரும் போட்டிகளில் இந்த பட்டியலில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -