சிஎஸ்கே 11 வீரர்கள்.. மும்பை 9 வீரர்கள்.. இரண்டு அணியும் கழட்டிவிட்ட வீரர்களின் மொத்த விபரம் – ஐபிஎல் 2026

0
244
CSK

அடுத்த வருடம் ஐபிஎல் தொடருக்கு தயாராகும் விதமாக, அடுத்த மாதம் நடக்க ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன்பாக சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் கழட்டிவிட்டு உள்ள வீரர்கள் குறித்த விபரங்களை பார்க்கலாம்.

சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்று, ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய அணிகளாக இருக்கின்றன. ஆனால் அவர்களுக்கு கடந்த சில வருடங்கள் மிகவும் மோசமாக அமைந்து வருவதால் அணியை சீரமைப்பதில் பெரிய அளவில் கவனத்தைச் செலுத்தி இருக்கின்றன.

- Advertisement -

மும்பை இந்தியன்ஸ்

மும்பை இந்தியன்ஸ் அணி ரூதர்போர்டு சர்துல் தாகூர் மற்றும் மயங்க் மார்க்கண்டே என மூன்று வீரர்களை ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன்பாகவே ட்ரேடிங் மூலம் மற்ற அணிகளிலிருந்து வாங்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து மொத்தம் 9 வீரர்களை வெளியே விட்டு இருக்கிறது.

வெளியே விட்ட வீரர்கள்: ரீஸ் டாப்ளி, பெவான் ஜேக்கப்ஸ், முஜீப் ரஹ்மான், லிசார்டு வில்லியம்ஸ், கரண் ஷர்மா, சத்திய நாராயணா, அர்ஜுன் டெண்டுல்கர், கேஎல். ஸ்ரீஜித் மற்றும் விக்னேஷ் புத்தூர்.

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ்

சிஎஸ்கே அணி ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சஞ்சு சாம்சனை டிரேடிங் மூலம் வாங்கிக் கொண்டு, ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரன் இருவரையும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கொடுத்திருக்கிறது.

இதையும் படிங்க : கேப்டன்ஷியில் ரிஷப் பண்ட் அதகளம்.. குல்தீப்பை வெளியில் வைத்து மாஸ் சம்பவம் – களத்தில் என்ன நடந்தது?

வெளியே விட்ட வீரர்கள் : ராகுல் திரிபாதி, வன்ஸ் பேடி, ஆண்ட்ரே சித்தார்த், ரச்சின் ரவீந்தரா, சாம் கரன், தீபக் ஹூடா, விஜய் சங்கர், சேக் ரசீத், கமலேஷ் நாகர்கோட்டி, பதிரனா மற்றும் ரவீந்திர ஜடேஜா.

- Advertisement -