கேப்டன்ஷியில் ரிஷப் பண்ட் அதகளம்.. குல்தீப்பை வெளியில் வைத்து மாஸ் சம்பவம் – களத்தில் என்ன நடந்தது?

0
38
Rishabh

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் இன்று தற்காலிக கேப்டனாக ரிஷப் பண்ட் செய்த கேப்டன்சி கிரிக்கெட் பலூன் அவர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.

இன்றைய நாள் போட்டியில் இந்திய கேப்டன் சுப்மன் கில் பேட்டிங் செய்த பொழுது அவருக்கு கழுத்தில் விடுப்பு ஏற்பட்ட காரணத்தினால் வெளியேறிவிட்டார். இதன்பிறகு அவர் இரண்டாவது இன்னிங்ஸில் கேப்டன்சி செய்ய உள்ளே வரவில்லை. இந்த நிலையில் கேப்டன் பொறுப்பை துணை கேப்டன் ரிஷப் பண்ட் ஏற்றார்.

- Advertisement -

பயன்படுத்தாத பவுலர்கள்

இன்று இரண்டாவது நாள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 93 ரன்னுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்து மொத்தம் 63 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது. அந்த அணி மொத்தமாக இந்திய அணிக்கு இலக்காக நூறு ரன் கொடுப்பதே தற்பொழுது கடினமான விஷயமாக மாறி இருக்கிறது.

இந்த நிலையில் இந்த இரண்டாவது இன்னிங்ஸில் வேகப்பந்துவீச்சாளர் சிராஜ் மற்றும் அஸ்வின் இடத்தை நிரப்ப வந்திருக்கும் வாஷிங்டன் சுந்தர் இருவருக்கும் ரிஷப் பண்ட் கேப்டனாக ஒரு ஓவர் கூட பந்து வீச வாய்ப்பு கொடுக்கவில்லை. மேலும் பும்ராவையும் சீக்கிரமாக பந்து வீச்சில் இருந்து வெளியேற்றி விட்டார்.

- Advertisement -

ரிஷப் பண்ட் மாஸ் மூவ்

இந்த இரண்டாவது இன்னிங்ஸில் குல்தீப் யாதவ் முதல் விக்கட்டாக இடதுகை பேட்ஸ்மேன் ரியான் ரிக்கல்டன்னை வெளியேற்றியதும் அவருக்கு ரிஷப் பண்ட் ஓவரை நிறுத்திவிட்டார். இதற்குப் பிறகு தொடர்ந்து இடதுகை சுழல் பந்துவீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் இருவருக்கு மட்டுமே பந்து வீச தொடர்ச்சியாக வாய்ப்புக் கொடுத்தார்.

ஏனென்றால், தென் ஆப்பிரிக்கா பேட்டிங் வரிசையில் தொடர்ந்து வலது கை பேட்ஸ்மேன் இருப்பதால், அவர்களுக்குப் பந்தை வெளியே திருப்பும் ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் இருவரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற முடிவில் இருந்தார். இவர்களுக்கு பந்தை உள்ளே திருப்பும் வாஷிங்டன் சுந்தர் மற்றும் குல்தீப் யாதவை கொண்டு வந்தால் அதிரடியாக விளையாட வசதியாக இருக்கும் என்பதால் ரிஷப் பண்ட் இதைச் செய்யவில்லை. இந்த ஆடுகளத்தில் ரன்கள் எடுப்பது கடினமாக இருப்பதால் சுலபமாக ரன்கள் தர விரும்பவில்லை.

இதையும் படிங்க : ஒரே நாளில் 16 விக்கெட்.. உலக சாம்பியன் பரிதாபம்.. இந்திய அணி வெற்றியின் பக்கம் – முதல் டெஸ்ட்

மேலும் கடைசியில் குல்தீப் யாதவை கொண்டு வந்த பொழுதும், அவரை வலதுகை பேட்ஸ்மேன் யான்சனுக்கு பந்தை வெளியே செல்லும்படி கூக்லி வீசவைத்து விக்கெட்டை கைப்பற்றினார். தென் ஆப்பிரிக்க வலது கை பேட்ஸ்மேன்களுக்கு பந்தை வெளியே திருப்பினால் விக்கெட் பல வகைகளில் கிடைக்கும் என்பதால் தொடர்ந்து ரிஷப் பண்ட் ஒரே முடிவில் இருந்து இறுதியாக 7 விக்கெட்டை வீழ்த்தி இருக்கிறார். அவரது இந்த புத்திசாலித்தனத்தை கிரிக்கெட் வல்லுனர்கள் பாராட்டி வருகிறார்கள்.

- Advertisement -