இன்று தங்களது சொந்த நாட்டில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தான அணி முதல்முறையாக தோல்வியடைந்தது. இந்த தோல்வியால் அவர்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறுவதில் கடினமான சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.
அதே சமயத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளை தாண்டி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பு இருக்கவே செய்கிறது. ஆனால் அது மிகவும் கடினமான ஒரு காரியமாக மாறுகிறது.
பாகிஸ்தான் அணிக்கான வாய்ப்பு
பங்களாதேஷ் அணிக்கு எதிராக 2, இங்கிலாந்து அணிக்கு எதிராக 3, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2 பிற மொத்தம் ஏழு டெஸ்ட் போட்டிகளை உள்நாட்டில் இந்த மாதத்தில் இருந்து பாகிஸ்தான அணி விளையாடுகிறது. மேலும் தென்னாப்பிரிக்காவிற்கு சென்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடுகிறது.
இந்த ஒன்பது டெஸ்ட் போட்டிகளில் ஏழு டெஸ்ட் போட்டிகளை பாகிஸ்தான் அணி வென்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வாய்ப்பில் தொடர்ந்து நீடிக்க முடியும்என்ற நிலை இருந்தது. தற்போது இதில் தான் உள்நாட்டில் நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒரு டெஸ்டில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்திருக்கிறது.
தற்போது பாகிஸ்தான் அணிக்கு மீதம் எட்டு டெஸ்ட் போட்டிகள் இருக்கிறது. இந்த எட்டு டெஸ்ட் போட்டியிலும் பாகிஸ்தான் அணி வெல்லும் பொழுது அதனுடைய வெற்றி சதவீதம் 70.24 என்று இருக்கும். மேலும் அந்த அணியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற முடியும். அதே சமயம் உள்நாட்டில் இங்கிலாந்து மற்றும் வெளிநாட்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு போட்டியில் தோற்றாலும் வாய்ப்பு முடிந்தது. தற்போது ஒன்பது அணிகளில் பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கும் மேலே எட்டாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா – ஆஸ்திரேலியா
தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் முதல் இரண்டு இடங்களில் இருக்கின்றன. இதில் இந்திய அணிக்கு அடுத்து பத்து டெஸ்ட் போட்டிகள் இருக்கிறது. இதில் இந்திய அணி எட்டு டெஸ்ட் போட்டிகளை வென்றால், பாகிஸ்தான் அணிகள் எத்தனை போட்டிகளை வென்றாலும் இந்திய அணியை தாண்ட முடியாது.
இதையும் படிங்க : 448 ரன் 6 விக்கெட்.. ஆனா டிக்ளர் பண்ணி தோக்குது.. யாரும் தராதத பாகிஸ்தான் அணி தருது – ஆகாஷ் சோப்ரா விமர்சனம்
இதேபோல் ஆஸ்திரேலியா அணிக்கு மேற்கொண்டு ஏழு டெஸ்ட் போட்டியில் இருக்கிறது. இதில் அந்த அணி ஆறு டெஸ்ட் போட்டிகளை வென்றால் ஆஸ்திரேலியா அணியை பாகிஸ்தான் அணியால் தாண்டி செல்ல முடியாது. தற்போது பாகிஸ்தான் தங்களது எல்லா ஆட்டங்களையும் வெல்ல வேண்டும். அதே சமயத்தில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிக் கொள்ளும் டெஸ்ட் தொடரில் ஏதாவது ஒரு அணி பெரிய தோல்வியை தழுவ வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது!