இன்று துலீப் டிராபியில்.. இந்திய அணியில் 3 இடத்துக்கு மோதும்.. 7 வீரர்கள்.. முழு அலசல்

0
254
Shreyas

இன்று இந்திய உள்நாட்டு டெஸ்ட் தொடரான துலீப் டிராபி தொடங்குகிறது. இந்த நிலையில் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெறுவதற்காக இந்த தொடரில் 7 முக்கிய வீரர்களுக்கு இடையே கடுமையான போட்டியில் நிலவுகிறது. அவர்கள் யார் என்பது குறித்து? பார்க்கலாம்.

மேலும் இந்த மாதம் 19ஆம் தேதி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி உள்நாட்டில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளையாடுகிறது. அடுத்து அக்டோபரில் மீண்டும் உள்நாட்டில் நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இதைத் தொடர்ந்து நவம்பர் இறுதியில் ஆஸ்திரேலியா சென்று ஐந்து டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. எனவே துலீப் டிராபியில் சிறப்பாக விளையாட வேண்டிய அவசியம் சில இந்திய வீரர்களுக்கு இருக்கிறது.

- Advertisement -

ஸ்ரேயாஸ் ஐயர் – கேஎல்.ராகுல் – சர்ப்ராஸ் கான்

இவர்கள் மூவருமே இந்திய டெஸ்ட் அணியின் ஐந்தாவது அல்லது ஆறாவது இடத்தில் விளையாடக் கூடியவர்களாக இருக்கிறார்கள். மேலும் ரிஷப் பண்ட் திரும்பி வந்து விட்டதால் அவரிடம் பெறும் பொழுது ஐந்தாவது இடம் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இப்போதைக்கு ஆறாவது இடம் மட்டுமே காலியாக இருக்கிறது.

இந்த நிலையில் ஆறாவது இடத்தில் சப்ராஸ்கான் உள்நாட்டில் அதிரடியாக சுழல் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ரன்கள் எடுக்க கூடியவர். மேலும் அதிவேக மார்க் வுட் பந்துவீச்சிலும் சிறப்பாக விளையாடியிருந்தார். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மூன்று அரை சதங்கள் அடித்து நிரூபித்திருக்கிறார். ஸ்ரேயாஸ் ஐயர்தான் இதில் பார்மில் இல்லை. எனவே இந்த மூவரில் இவருக்கே அதிக அழுத்தம் இருக்கிறது.

ரிஷப் பண்ட் – துருவ் ஜுரல்

- Advertisement -

இதில் ரிஷப் பண்ட்டை மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் கொண்டு வருவதற்கு இந்திய கிரிக்கெட் நிர்வாகம் மிகுந்த ஆர்வத்தோடு இருக்கிறது. அவர் இரண்டு வருடங்களுக்கு பக்கம் கழித்து மீண்டும் சிவப்பு பந்து வடிவத்தில் விளையாட இருக்கிறார். எனவே துருவ் ஜுரலுக்கே அதிகப்படியான அழுத்தம் இருக்கிறது. இந்தியாவில் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான டெஸ்ட் ஆடுகளத்தில் விக்கெட் கீப்பராக கேஎல்.ராகுலை பார்க்க மாட்டார்கள் என்பது, இவருக்கு ஆறுதல் அளிக்கும் விஷயமாக இருக்கிறது.

அர்ஸ்தீப் சிங் – ஆகாஷ் தீப்

முகமது சமி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா இருவரும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரில் விளையாட மாட்டார்கள் என்று தெரிகிறது. எனவே முகமது சிராஜ் இடம் பெறுவது உறுதியாகியிருக்கிறது. முகேஷ் குமாருக்கும் வாய்ப்பு கொடுக்கப்படும். மூன்றாவது வேகப்பந்துவீச்சாளருக்கான இடத்தில் இடதுகை பந்துவீச்சாளரை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் விரும்புகிறது.

இதையும் படிங்க : 25 பந்து.. 10 சிக்ஸ்.. 314 ஸ்ட்ரைக் ரேட்.. நொறுக்கிய இளம் வீரர்.. ரிங்கு சிங் அணி வெற்றி.. உபி டி20 லீக் 2024

அதே சமயத்தில் ஆகாஷ் தீப் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக கிடைத்த ஒரு வாய்ப்பில் பந்துவீசி இருந்தார். அடுத்து ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் வரை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் யோசிக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு ஒரு இடதுகை வேகப்பந்து வீச்சாளரை கொண்டு செல்ல நினைக்கிறது. எனவே இந்தப் போட்டியில் அர்ஸ்தீப் சிங் முந்துகிறார் என்று கூறப்படுகிறது.