ஐபிஎல் தொடரை வீட்டில் இருந்து பார்ப்பது மிகவும் கொடுமையானது – விரக்தியில் பேசியுள்ள முன்னாள் சிஎஸ்கே வீரர் சாம் கரன்

0
130
Sam Curran CSK

இங்கிலாந்தைச் சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் சாம் கரன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி கொண்டிருந்தபோது, காயம் காரணமாக அவதிப்பட்டார். கீழ் முதுகில் அவருக்கு பெரிய காயம் ஏற்பட்டது. ஸ்கேன் எடுத்துப் பார்க்கையில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது உறுதியானது.

மருத்துவ குழுவின் ஆலோசனைப்படி அவர் 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறினார். அதன் பின்னரும் டி20 உலக கோப்பை தொடர், ஆஷஸ் தொடர் இந்த இரண்டிலும் அவரால் பங்கேற்க முடியாமல் போனது. கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்கு மேலாக ஓய்வு எடுத்து வரும் அவர் தற்போது ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாமல் போனது குறித்து வருத்தமாக தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

வீட்டிலிருந்து ஐபிஎல் தொடர் பார்ப்பது கொடுமையானது

ஐபிஎல் தொடர் என்பது முழுக்க முழுக்க கிரிக்கெட் பற்றிய தொடர். இந்த தொடர் நடைபெறும் காலத்தில் நீங்கள் வாழும் பொழுதும் சுவாசிக்கும் போதும் கிரிக்கெட்டை மட்டுமே உணர்வீர்கள். ஒவ்வொரு நாளும் லெஜெண்ட் கிரிக்கெட் வீரர்களுடன் இணைந்து உணவு உண்ணும் வேளையில் கிரிக்கெட்டைப் பற்றி பேசுவது அரட்டை அடிப்பது என சந்தோசமாக இருக்கும்.

ஒரு கட்டத்தில் ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாடலாம் என்று முடிவெடுத்து விட்டேன். நான் இறுதியில் நான் அந்த முடிவை எடுக்கவில்லை. மருத்துவக் குழுவின் ஆலோசனைப்படி நான் அந்த முடிவை எடுத்தது சரிதான். நினைத்ததை விட ஐபிஎல் தொடர் வெகு சீக்கிரத்தில் வந்து விட்டது.

- Advertisement -

மீண்டும் நான் அங்கே வந்து விளையாடும் வேளையில் மற்றொருவர் காயம் ஏற்பட்டால் அது எனக்கு மிகப்பெரிய பின்விளைவை ஏற்படுத்தும். எனவே நான் எடுத்த அந்த முடிவு சரி என்று தற்பொழுது நினைக்கிறேன்.

ஆனால் உண்மையில் ஐபிஎல் தொடரை மீட்டரிலிருந்து பார்ப்பது மிகவும் கொடுமையானது. இன்னும் கூடிய விரைவில் குணமடைந்து இனி வரும் ஐபிஎல் தொடர்களில் தொடர்ச்சியாக பங்கேற்று விளையாடுவேன் என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர் ஐபிஎல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் நான் அங்கே இல்லை என்பது மிகப்பெரிய விரக்தியை எனக்கு கொடுத்தாலும், கடந்த இரண்டு மாதங்களாக சர்ரேயின் குளிர்காலத்தை சந்தோஷமாக கழித்து வருகிறேன். நான் நீண்ட காலமாக சர்ரேயின் குளிர்காலத்தில் ஒரு பகுதியாக இல்லாமல் இருந்தேன். தற்பொழுது சர்ரேயின் குளிர்காலத்துடன் நாட்களை கழிப்பது நன்றாக இருக்கிறது என்று சந்தோஷமாக கூறியுள்ளார்.