சிஎஸ்கே அணியில் மகேந்திர சிங் தோனியின் தலைமையில் விளையாடுவதற்காக சம்பளத்தை குறித்துக் கொள்ளவும் பெஞ்சில் அமர்ந்திருக்கும் தயாராக இருந்ததாக தென் ஆப்பிரிக்கா ஜாம்பவான் முன்னாள் வீரர் டேல் ஸ்டெய்ன் தெரிவித்திருக்கிறார்.
இந்த வருடம் சிஎஸ்கே அணி தக்க வைத்த ஐந்து வீரர்களில் மகேந்திர சிங் தோனியும் ஒருவராக இருக்கிறார். அவரை சிஎஸ்கே அணி நிர்வாகம் அன் கேப்டு பிளேயர் லிஸ்டில் வைத்து நான்கு கோடி ரூபாய்க்கு தக்க வைத்திருக்கிறது. இதன் மூலம் அவர் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் விளையாடுவது உறுதியாக இருக்கிறது.
கேப்டன்களின் கேப்டன் தோனி
கிரிக்கெட் உலகில் சர்வதேச அணிகளுக்கு கேப்டனாக இருந்த பிரண்டன் மெக்கலம், பாப் டு பிளேசிஸ், டுவைன் பிராவோ இப்படி நிறைய வீரர்கள் ஐபிஎல் தொடரில் மகேந்திர சிங் தோனியின் தலைமையின் கீழ் விளையாடியிருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே தோனியின் கேப்டன்சியை வியந்து பாராட்டி இருக்கிறார்கள்.
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்காக விளையாடிய டக் போலிஞ்சர் மாதிரியான வீரர் கூட தன்னுடைய சர்வதேச கேப்டனை விட மகேந்திர சிங் தோனி சிறந்த கேப்டன் என்று கூறியிருக்கிறார். பல வீரர்களும் தற்போது கூட ஒரு முறையாவது மகேந்திர சிங் தோனி விளையாடும் அணியிலாவது இருக்க வேண்டும் என்று விளையாடுகிறார்கள்.
தோனிக்காக செய்ய நினைத்தேன்
தோனி பற்றி டேல் ஸ்டெய்ன் கூறும்பொழுது “நான் தோனியின் பெரிய அபிமானி. நான் எப்பொழுதும் சிஎஸ்கே அணியின் ஒரு அங்கமாக இருக்க விரும்பினேன். உண்மையில் சிஎஸ்கே அணியின் விளையாடுவதற்காக நான் சம்பளத்தை குறைத்துக் கொள்ளவும் தயாராக இருந்தேன். மேலும் சிஎஸ்கே அணியின் பெஞ்சில் உட்காரவும் தயாராக இருந்தேன். நான் அந்த அணியின் ஒரு பகுதியாக இருந்தாலே போதும்”
இதையும் படிங்க : ரிஷப் பண்ட்க்கு ஐபிஎல் ஏலத்தில் 50 கோடி கொடுங்க.. இந்த ஒரு காரணம் போதும் – பாகிஸ்தான் பசித் அலி வேண்டுகோள்
” நான் தோனி போன்ற ஒருவர் ஆகவே அந்த அணியில் விளையாட விரும்பினேன். நான் மீண்டும் திரும்பி வர வேண்டும் என்று யாராவது சொன்னால், நான் சிறந்த முறையில் திரும்பி வந்து, முன்பிருந்ததை விட சிறந்த வீரராக தயாராக, அதற்கு அடுத்து நான் ஒரு சிறந்த பயிற்சியாளராக உருவாக, தோனி இருக்கும் அணியில் இருந்தால் உதவியாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.