டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் முதன்மையான விளையாட்டாக கருதப்பட்டாலும் குறிப்பிடத்தக்க பந்து வீச்சாளர்கள் இந்த தொடரிலும் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
இந்தியாவில் ஐபிஎல் தொடருக்கு கிடைத்த பெரும் வரவேற்பை பார்த்து ஆஸ்திரேலியாவில் பிக் பாஸ், தென் ஆப்பிரிக்காவில் எஸ்ஏ டி20 தொடர் என உலகம் முழுவதும் பல்வேறு பிரான்சி லீக் டி20 தொடர்கள் நடைபெற்ற வருகின்றன. சர்வதேசப் போட்டிகள் மட்டுமல்லாது பிரான்சிஸ் டி20 தொடரிலும் சேர்த்து 500 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய நான்கு வீரர்கள் குறித்து காண்போம்.
4.இம்ரான் தாஹிர்
தென்னாபிரிக்காவின் மூத்த லெக் ஸ்பின்னரான இம்ரான் தாகிர் மொத்தமாக 408 டி20 போட்டிகளில் விளையாடி 508 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறார்.இந்த விக்கெட்டுகளை 19.93 என்ற சராசரியில் 6.98 என்கிற எகானமி விகிதத்தில் எடுத்திருக்கிறார். இதில் பத்து முறை நான்கு விக்கெட்டுகளையும், ஐந்து முறை ஐந்து விக்கெட்டுகளும் வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
3.சுனில் நரேன்
வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த முன்னணி மூத்த சுழற் பந்துவீச்சாளரான சுனில் நரேன் இந்தப் பட்டியலில் டி20 போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய வரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். மொத்தமாக 521 போட்டிகளில் விளையாடி 561 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார். இதில் 12 முறை 4 விக்கெட்டுகளும் ஒருமுறை ஐந்து விக்கெட்டுகளும் வீழ்த்தி இருக்கிறார். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக முன்னணி பந்துவீச்சாளராக திகழ்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
2.ரஷீத் கான்
உலகின் தலைசிறந்த சுழற் பந்துவீச்சாளர்களில் ஒருவரான ரஷீத் கான் இதுவரை மொத்தமாக 448 டி20 போட்டிகளில் விளையாடி 613 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இதில் 15 முறை நான்கு விக்கெட்டுகளும் நான்கு முறை ஐந்து விக்கெட்டுகளும் வீழ்த்தி இருக்கிறார். இவரின் சிறந்த பந்துவீச்சாக பிக் பாஸ் தொடரில் 17 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 6 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
1.டுவைன் பிராவோ
வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி பந்துவீச்சாளர்களில் ஒருவராக திகழும் டுவைன் பிராவோ இதுவரை டி20 போட்டிகளில் மொத்தமாக 448 போட்டிகளில் விளையாடி 630 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் இடத்தில் இருக்கிறார். இதில் 11 முறை நான்கு விக்கெட்டுகளும், இரண்டு முறை ஐந்து விக்கெட்டுகளும் வீழ்த்தி இருக்கிறார்.
இதையும் படிங்க:என் 800 டெஸ்ட் விக்கெட்.. இனி யாராலும் தாண்ட முடியாது.. வருத்தமான காரணம் இதுதான் – முரளிதரன் பேட்டி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக திகழும் பிராவோ மொத்தமாக ஐபிஎல் தொடரில் 161 போட்டிகளில் விளையாடி 183 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு தனது ஐபிஎல் வாழ்க்கையை முடித்திருக்கிறார். மேலும் 104 சிபிஎல் போட்டிகளில் விளையாடி 128 விக்கெட்டுகளும் 42 பிபிஎல்லில் விளையாடி 62 விக்கெட்களையும் எடுத்து உள்ளார்.