நியூசி டெஸ்ட் சீரிஸ்.. 4 இளம் இந்திய ரிசர்வ் வீரர்கள் அறிவிப்பு.. அகர்கர் கம்பீர் அதிரடி

0
2067
Mayank

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு 15 பேர் கொண்ட அணி சற்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இதில் நான்கு இளம் இந்திய வீரர்களுக்கு ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் இடம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெங்களூர் மைதானத்தில் வருகின்ற அக்டோபர் 16ஆம் தேதி துவங்குகிறது. இந்திய வீரர்கள் நாளை முதல் இதற்கான பயிற்சியில் களம் இறங்குகிறார்கள்.

- Advertisement -

15 பேர் கொண்ட அணியில் ஆச்சரியம்

நியூசிலாந்து தொடருக்கு அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட அணியில் துணை கேப்டன் பொறுப்புக்கு பும்ரா அறிவிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு இந்திய அணியின் துணை கேப்டன் பதவி யாருக்கும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடது கை வேகப்பந்துவீச்சாளர் யாஸ் தயால் இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். அந்தத் தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாத நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.

- Advertisement -

நான்கு இளம் ரிசர்வ் வீரர்கள்

இந்த நிலையில் அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட அணிக்கு எதிர்பார்க்காத வகையில் நான்கு இளம் இந்திய வீரர்கள் ரிசர்வ் வீரர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் மயங்க் யாதவ், நிதீஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் ரிசர்வ் வீரர்களாக இடம் பெற்று இருக்கிறார்கள்.

இதையும் படிங்க : என் மகனுக்கு அப்பவே.. அந்த விஷயத்தை சொன்னதே ஹர்திக்தான்.. நிதிஷ் குமார் தந்தை பேட்டி

வேகப்பந்துவீச்சாளர்களுக்கு யாராவது காயம் ஏற்பட்டால் இவர்கள் நேரடியாக அணியில் இடம் பெறுவார்கள். இரண்டு டெஸ்ட் போட்டிகளை இந்திய அணி வென்றால், மூன்றாவது போட்டியில் ஆல் ரவுண்டராக நிதீஷ் குமார் நடிக்கும் கூட வாய்ப்பு தரப்படலாம். ஏனென்றால் அடுத்த ஆஸ்திரேலியா செல்லும் அணியில் அவர் வேகப்பந்துவீச்சு ஆல் ரவுண்டராக கூட பரிசீலிக்க படலாம் என்பது குறிப்பிடத்தக்கது. கம்பீர் மற்றும் அகர்கர் இணைந்ததும் பல்வேறு ஆச்சரியமான விஷயங்களை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

- Advertisement -