தென் ஆப்பிரிக்க டி20 லீக் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணையும் புதிய நான்கு வீரர்கள்!

0
287
Mumbai Indians

உலகின் நம்பர் ஒன் டி20 தொடராக ஐபிஎல் இருக்கிறது. இதைப்போல் பல கிரிக்கெட் நாடுகளும் டி20 தொடர்களை நடத்துகின்றன. தற்பொழுது சவுத் ஆப்பிரிக்கா சிஎஸ்ஏ டி20 லீக் என்று ஒரு புதிய தொடரை நடத்துகிறது.

இதற்காக மொத்தம் 6 அணிகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆறு அணிகளையும், சென்னை மும்பை லக்னோ ஹைதராபாத் ராஜஸ்தான் டெல்லி ஆகிய ஆறு ஐபிஎல் அணிகள் வாங்கி இருக்கின்றன.

- Advertisement -

தற்பொழுது இந்த தொடருக்கும் ஐபிஎல் தொடர் போலவே மெகா ஏலம் நடத்தப்பட இருக்கிறது. ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணிகளும் 5 வீரர்களை முன்கூட்டியே ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். இந்த 5 வீரர்களில் ஒரு இன்டர்நேஷனல் சவுத் ஆப்பிரிக்கா பிளேயர், ஒரு சவுத் ஆப்பிரிக்கா டொமஸ்டிக் பிளேயர், 3 ஃபாரின் பிளேயர்கள் இருக்கலாம். இந்த மூன்று பாரில் பிளேயர்களில், இரண்டு பேர் மட்டும் ஒரே நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். இந்தத் தொடரில் மும்பை அணி கேப் டவுன் அணியை வாங்கி எம்ஐ கேப் டவுன் என்று பெயரிட்டு இருக்கிறது. இதை உச்சரிக்கும் பொழுது மை கேப்டவுன் என்று உச்சரிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறது. தற்பொழுது இந்த தொடருக்காக மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடும் புதிய வீரர்கள் 4 பேரை பார்க்கலாம்!

சாம் கரன்:

இங்கிலாந்து வீரரான இவர், இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டை உயர்த்துவதற்காக, கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் கலந்து கொள்ளவில்லை. அதற்கு முன்பு ஐபிஎல் தொடரில் முதன்முதலில் பஞ்சாப் பணிக்காகவும் அதற்கடுத்து சென்னை அணிக்காகவும் விளையாடியிருக்கிறார். தற்பொழுது இவர் முதல்முறையாக சவுத் ஆப்பிரிக்கா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாடுகிறார்.

- Advertisement -

ககிசோ ரபாடா:

சர்வதேச போட்டிகளில் தென்னாப்பிரிக்கா அணிக்காக விளையாடி வரும் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான இவர், ஐபிஎல் தொடரில் முதலில் டெல்லி அணிக்காகவும், இந்த ஆண்டு பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது இவரை சவுத்ஆப்பிரிக்கா மும்பை இந்தியன்ஸ் அணி ஒப்பந்தம் செய்திருக்கிறது.

லியாம் லிவிங்ஸ்டன் :

தற்போதைய டி20 கிரிக்கெட் உலகில் அனாயசமாக பல இமாலய சிக்சர்களை அடிக்கக்கூடிய பிளேயர் இவர். இவர் ஐபிஎல் தொடரில் முதலில் ராஜஸ்தான் அணிக்காகவும் தற்போது பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார். அதிரடியில் தற்போது மிரட்டி வரும் இவரை மும்பை இந்தியன்ஸ் அணி ஒப்பந்தம் செய்திருக்கிறது.

ரசித் கான்:

தற்போதைய வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் மிகவும் அபாயகரமான சுழற்பந்துவீச்சாளர் என்றால் அது ஆப்கானிஸ்தானில் ரசித் கான்தான். பந்துவீச்சில் மட்டுமல்லாது இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக பேட்டிங்கிலும் மிரட்டினார். ஆரம்பத்தில் ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய இவர் இந்த ஆண்டு குஜராத் அணிக்காக விளையாடினார். தற்போது இவரை சவுத் ஆப்பிரிக்கா மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியிருக்கிறது. தற்போதைய அளவில் இந்த தொடருக்கான அணியை அமைப்பதில் மும்பை இந்தியன்ஸ் அணி முன்னணியில் இருக்கிறது!