போதும் ஓய்வு பெறுகிறேன்.. என் கடைசி தொடரை உங்க முன்னால் ஆடுவதில் பெருமை – பிராவோ அறிவிப்பு

0
446

வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான டிவைன் பிராவோ வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக மட்டுமல்லாமல் உலகில் நடைபெறும் பிரான்சிஸ் கிரிக்கட் தொடர்களுக்காக சிறப்பாக விளையாடி தனது திறமையை நிரூபித்திருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் பிரான்சிஸ் லீக் கிரிக்கெட்டின் கடைசி தொடரில் விளையாடுவது குறித்து பிராவோ சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார். அவர் ஏற்கனவே ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டர் வீரரான டிஜே பிராவோ என்று அழைக்கப்படும் டிவைன் பிராவோ வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருந்து ஓய்வு பெற்று தற்போது பிரான்சிஸ் கிரிக்கெட் தொடர்களில் பயிற்சியாளராகவும், போட்டியாளராகவும் பங்கேற்று வருகிறார். இவர் ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய புகழ்பெற்ற வீரர்களில் ஒருவர்.

தற்போது கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் ட்ரிபாங்கோ நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் நிலையில், இந்த ஆண்டோடு தனது கடைசி தொடரில் விளையாட உள்ளதாக குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் கரிபியன் லீக் தொடரின் ட்ரிபாங்கோ அணி தனக்கு அனைத்தையும் கொடுத்திருப்பதாக உணர்ச்சிமிக்க கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து பிராவோ விரிவாக கூறும்போது “இது ஒரு சிறந்த பயணமாக எனக்கு அமைந்திருக்கிறது. மேலும் எனது கரீபியன் மக்களுக்கு முன்பாக கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் தொழில் முறை இறுதிப் போட்டியை விளையாடுவதற்கு பெருமையாக இருக்கிறது. ட்ரிபாங்கோ நைட் ரைடர்ஸ் அணி எனக்கு அனைத்தையும் கொடுத்திருக்கிறது. டிகேஆர் அணியில் இருந்து எங்கு ஆரம்பித்தேனோ தற்போது அந்த அணியுடனே எனது இறுதிப் பயணம் நிறைவடையுள்ளது” என்று கூறியிருக்கிறார்.

கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் இவர் விளையாடி வரும் பிரபாங்கோ அணி இதுவரை 2015,17, 18, 20 ஆகிய ஆண்டுகளில் நான்கு முறை சாம்பியன் கோப்பையை கைப்பற்றி அசத்தியிருக்கிறது. மேலும் இவர் இடம் பெற்று விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் 2012 மற்றும் 2016 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:நானே சொல்றேன்.. நவீன கிரிக்கெட்டின் சிறந்த பீல்டர் இந்த இந்திய வீரர்தான்.. ஜான்டி ரோட்ஸ் பேட்டி

40 வயதான பிராவோ சிபிஎல் தொடரில் தனது ஓய்வை அறிவித்தாலும் மற்ற பிரான்சிஸ் டி20 தொழில்முறை தொடர்களிலும் விளையாட மாட்டார் என்று தெரிகிறது. பிராவோ எம்எல்சி தொடரில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் சிறப்பாக செயல்பட்டு கோப்பைகளை வெல்ல முக்கிய பங்காற்றி இருக்கிறார். தற்போது சென்னை அணியில் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். இதுவரை ஒட்டுமொத்த டி20 போட்டிகளில் 578 போட்டிகளில் விளையாடி 6970 ரன்கள் மற்றும் 630 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -