நானே சொல்றேன்.. நவீன கிரிக்கெட்டின் சிறந்த பீல்டர் இந்த இந்திய வீரர்தான்.. ஜான்டி ரோட்ஸ் பேட்டி

0
2104

தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஜான்டி ரோட்ஸ் பீல்டிங்கில் உலகப் புகழ்பெற்ற வீரர். மைதானத்தில் எந்த மூலையில் நிற்க வைத்தாலும் எளிதாக பந்திற்க்கும் தனக்குமான இடைவெளியை குறைத்துக் கொள்வார்.

இந்த சூழ்நிலையில் பீல்டிங்கில் சிறந்த வீரரான ஜான்டி ரோட்ஸ் இந்திய வீரர் ஒருவரை பாராட்டி பேசி இருப்பது ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்று வருகிறது.

- Advertisement -

தென் ஆப்பிரிக்க அணிக்காக விளையாடி பேட்டிங் மற்றும் பந்துவீச்சை தாண்டி பீல்டிங் மூலம் ஒரு வீரர் ரசிக்கப்படுகிறார் என்றால் அது அரிதிலும் அரிதான ஒரு நிகழ்வாகும். அத்தகைய சாதனையை ஜாண்டி ரோட்ஸ் தனது பீல்டிங்கின் மூலம் உலக மக்கள் அனைவரையும் கவர்ந்திழுத்திருக்கிறார். அதிலும் இந்திய ரசிகர்களிடையே இவர் மிகவும் புகழ்பெற்ற வீரர்.

தற்போது லக்னோ அணிக்கு பயிற்சியாளராக திகழ்ந்து வரும் நிலையில் சமீபத்தில் புரோ கிரிக்கெட் லீக் தொடரின் ட்ராபி மற்றும் ஜெர்சியை அறிமுகப்படுத்தும் விழாவில் கலந்து கொண்டார். அப்போது இந்திய வீரரான ரவீந்திர ஜடேஜாவை நவீன கிரிக்கெட்டில் ஃபீல்டிங்கில் சிறந்த வீரராக பார்ப்பதாக கூறியிருக்கிறார். மேலும் அவரை எந்த இடத்தில் நிற்க வைத்தாலும் அட்டகாசமான செயல் திறனை வெளிப்படுத்தக் கூடியவர் என்றும் பாராட்டியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “பீல்டராக நான் எப்போதும் போற்றக்கூடிய வீரர்களாக இருப்பது ரவீந்திர ஜடேஜா மற்றும் சுரேஷ் ரெய்னா என்ற இரண்டு வீரர்கள்தான். ஆனால் நவீன கிரிக்கெட் பற்றி பேசும்போது ரவீந்திர ஜடேஜா சிறந்த பீல்டராக தெரிகிறார். நீங்கள் அன்போடு அழைக்கும் ரவீந்திர ஜடேஜா தான் நவீன கிரிக்கெட்டின் சிறந்த பீல்டர்.

நான் அவரை சிறந்தவராக கருதுவதற்கு காரணம் பீல்டிங்கில் எந்த பொசிஷனில் நிற்க வைத்தாலும் சிறப்பாக செயல்படக்கூடியவர். அவரை மிட் விக்கெட், லாங் ஆன் அல்லது ஷார்ட் கவர் என்று எங்கு வேண்டுமானாலும் நிறுத்தலாம்.குறிப்பாக அவரது கால்கள் மிக வேகமாக செயல்படுகிறது. பந்து ஜடேஜாவிடம் செல்லும் போது பேட்ஸ்மேன் நிச்சயமாக பயப்படுவார். பந்தை பிடிப்பது அல்லது வேகமாக வீசுவது என்பதை விட நீங்கள் அங்கு எவ்வளவு வேகமாக சென்று அடைகிறீர்கள் என்பது மட்டுமே முக்கியம்” என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க:கில்லெஸ்பி தந்திரமா மோசமா இந்திய பிட்ச்ச இப்படி திட்டினவரு.. பாகிஸ்தான் கிரிக்கெட்ட காப்பாத்துவாரு – ஆடம் கில்கிறிஸ்ட் நம்பிக்கை

இந்திய அணியின் மார்டன் டே ஃபில்டர்களாக விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, ஜடேஜா ஆகியோர் இந்திய அணிக்காக சிறந்து விளங்கும் போது ஜாண்டி ரோட்ஸ் ஜடேஜாவை தேர்வு செய்திருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

- Advertisement -