உலக கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களின் பட்டியலில் எப்பொழுதும் முக்கியமான இடம் எந்த காலத்திலும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் பிரையன் லாராவுக்கு உண்டு. அப்படிப்பட்ட அவரை ஆரம்ப காலத்தில் அழ வைத்த ஒரு லெஜெண்ட் வீரர் பற்றிய சுவாரசிய தகவலை தன்னுடைய சுயசரிதை புத்தகத்தில் கூறியிருக்கிறார்.
பிரையன் லாரா அந்த புத்தகத்தில் நிறைய விஷயங்கள் குறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் மிகப்பெரிய அடையாளமான தான் ஆரம்பத்தில் அணியில் அதிகார துஷ்பிரயோகத்தை சந்தித்ததாகவும், ஆனால் அதை எதிர்கொள்ள மிகவும் தைரியமாக இருந்ததாகவும் கூறியிருக்கிறார்.
மேலும் தன்னுடைய சக வீரரான கார்ல் ஹூப்பர் இதை எதிர்கொள்ளும் அளவுக்கு இல்லை என்றும், இதன் காரணமாக அந்த குறிப்பிட்ட லெஜன்ட் வீரரிடம் இருந்து அவர் ஆரம்பத்திலேயே விலகி விட்டார் என்றும். இருந்தபோதிலும் அந்த லெஜன்ட் வீரர் ஒரு கொடுமைப்படுத்தக் கூடியவர் ஆக இருந்ததில்லை என்றும் பேசியிருக்கிறார்.
இதுகுறித்து லாரா கூறும்பொழுது “மூத்த வீரர் விஐவி ரிச்சர்ட்ஸ் என்னை மூன்று வாரத்திற்கு ஒருமுறை அழ வைப்பார். அதே சமயத்தில் ஹூப்பரை வாரத்திற்கு ஒரு முறை அழ வைப்பார். அவருடைய குரல் உங்களை பயமுறுத்தும். நீங்கள் அவர் பேசுவதை தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொண்டால், நிச்சயம் நீங்கள் பாதிப்படைவீர்கள்.
நான் அவர் பேசுவதில் எந்த வகையிலும் பாதிப்படைந்தது கிடையாது. ஒரு பக்கத்தில் நான் அதை வரவேற்கவே செய்தேன். ஏனென்றால் நான் அவரது பாதுகாப்பில் இருந்தேன். இதனால் என்னை நோக்கி துஷ்பிரயோகம் வரும் என்றும் தெரியும் ஆனால் நான் மன வலிமை உள்ளவனாக இருந்தேன். ஆனால் ஹூப்பர் இப்படி கிடையாது. அவர் ரிச்சர்ட்ஸை விட்டு விலகி விட்டார்.
இதையும் படிங்க : சண்டையை முடித்தது கம்பீர்தான் கோலி கிடையாது.. அங்க உண்மையில் நடந்தது இதுதான் – அமித் மிஸ்ரா தகவல்
மேலும் ரிச்சர்ட்ஸ் வேண்டுமென்றே மிரட்டியது கிடையாது. அவருடைய இயல்பே அப்படித்தான். அவர்கொடுமைப்படுத்தும் நபர் கிடையாது. அவர் மிகவும் ஆளுமை கொண்டவர். அவர் மிகவும் ஆக்ரோஷம் கொண்டவர். இதே வழியில் உங்களுக்கு அணிக் கூட்டத்தில் நல்ல ஊக்கம் கொடுப்பார். வீரர்களை எப்பொழுதும் ஆதரிப்பார். அவர் தனிப்பட்ட முறையில் எதையும் குறி வைத்து தாக்க மாட்டார்” என்று கூறி இருக்கிறார்.