சண்டையை முடித்தது கம்பீர்தான் கோலி கிடையாது.. அங்க உண்மையில் நடந்தது இதுதான் – அமித் மிஸ்ரா தகவல்

0
305
Virat

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ஆர்சிபி அணி விளையாட இருந்த போட்டியின் போது கவுதம் கம்பீர் மற்றும் விராட் கோலி இருவரும் பழைய சண்டையை மறந்து சமரசம் ஆனார்கள். ஆனால் இந்தச் சமரசத்தை முதலில் கவுதம் கம்பீர்தான் ஏற்படுத்தினார் என்றும் விராட் கோலி முன்வந்து எதையும் செய்யவில்லை என்றும் இந்திய முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா கூறியிருக்கிறார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு லக்னோ மற்றும் ஆர்சிபி அணிகள் பெங்களூர் மைதானத்தில் மோதிய போட்டியில் விராட் கோலி மற்றும் லக்னோனிக்காக விளையாடிய நவீன் உல் ஹக் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் களத்தில் உருவானது. இது வீரர்கள் போட்டி முடிந்து கைகுலுக்கி கொள்ளும் சம்பிரதாய நிகழ்வின் போதும் தொடர்ந்தது.

- Advertisement -

அந்த நேரத்தில் நடந்த சச்சரவுகளின் போது லக்னோ அணியின் மென்டராக இருந்த கவுதம் கம்பீர் விராட் கோலி இடம் வாய் விவாதத்தில் ஈடுபட ஆரம்பித்தார். இதனால் களம் சூடானது. பிறகு ஒரு வழியாக பிரச்சனை முடிய ஐபிஎல் நிர்வாகம் அதில் ஈடுபட்ட எல்லோருக்கும் அபராதம் விதித்ததுடன் பிரச்சனையை முடித்தது.

இதற்கு அடுத்துதான் இந்த வருடம் ஐபிஎல் தொடரின் போது இருவருக்கும் இடையில் சமரசமானது. ஆனால் இந்த சமரசத்திற்கு மூத்த வீரர் கவுதம் கம்பீர்தான் முதலில் வந்தார் என்றும், ஆனால் விராட் கோலி தான் வந்திருக்க வேண்டும் என்றும் இந்திய முன்னால் வீரர் அமித் மிஸ்ரா கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து ஒரு நிகழ்ச்சியில் பேசிய அமித் மிஸ்ரா கூறும் பொழுது “கம்பீரிடம் நான் ஒரு நல்ல விஷயத்தை பார்த்தேன். அந்த சமரசத்தின் போது விராட் கோலி முன்வந்து பேச கிடையாது. கம்பீர்தான் அவரிடம் சென்று ” நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? உங்களுடைய குடும்பம் எப்படி இருக்கிறது என்று விசாரித்தார். அந்தச் சண்டையை முடித்தது கம்பீர்தான் விராட் கோலி இல்லை.

இதையும் படிங்க : நான் பிளேயரா ஜெயிக்கிறதை விட.. டீம்ல இத கட்டாயம் உருவாக்கறது முக்கியம் – சஞ்சு சாம்சன் பேட்டி

அந்த நேரத்தில் கம்பீர் பெரிய மனதுடன் நடந்து கொண்டார். ஆனால் விராட் கோலிதான் முதலில் அவரிடம் சென்று சண்டையை முடித்துக் கொண்டிருக்க வேண்டும்.அவரிடம் சென்று கம்பீர் பாய் இதை முடித்துக் கொள்வோம் என்று கூறி இருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படி நடந்து கொள்ளவில்லை” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -