வெ.இ அப்ப பணத்துக்கு ஆசைப்படல.. ஆனா இந்தியா ஆஸி இங்கிலாந்து வாரியங்கள் பண்றது மோசம் – கிளைவ் லாயிட் விமர்சனம்

0
242
ICC

தற்போது கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய கிரிக்கெட் வாரியங்களாக இந்தியா ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்கள் இருக்கின்றன. இந்த மூன்று நாடுகளும் வருமானத்தை பிரிப்பதில் மோசமான அணுகுமுறையை கொண்டிருப்பதாக வெஸ்ட் இண்டீஸ் கிளைவ் லாயிட் விமர்சனம் செய்திருக்கிறார்.

முன்பு ஐசிசி உலக கிரிக்கெட் நாடுகளை ஒட்டுமொத்தமாக கட்டுப்படுத்தி வந்தது. இதில் எந்த கிரிக்கெட் வாரியம் அதிகம் சம்பாதித்து கொடுத்தாலும், அனைத்து கிரிக்கெட் நாடுகளுக்கும் ஒரே அளவில் பணம் பிரித்துக் கொடுக்கப்பட்டது. இதன் காரணமாக எல்லா நாடுகளிலும் கிரிக்கெட் சமமான வளர்ச்சியை பெறுவதற்கான வாய்ப்புகள் இருந்தது.

- Advertisement -

தற்போது இந்தியா ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய மூன்று கிரிக்கெட் வாரியங்கள் கூடுதலான வருமானத்தை கொண்டிருப்பதால் கூடுதலான நிதி பகிர்வை பெறுகின்றன. இதனால் மற்ற நாடுகளுக்கு கிடைத்துக் கொண்டிருந்த வருமானம் குறைந்திருக்கிறது. இந்த நிதி பகிர்வு பலராலும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் கூட இதை எதிர்க்கிறார்கள்.

இதுகுறித்து தற்பொழுது 1971 மற்றும் 1975 ஆம் ஆண்டு உலகக் கோப்பைகளை வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கிளைவ் லாயிட் கூறும்பொழுது “நாங்கள் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த பொழுது நாங்கள் கூடுதலாக எந்த பணத்தையும் ஐசிசி இடம் கேட்கவில்லை. ஆனால் இப்பொழுது இந்தியா இங்கிலாந்து ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் 180 மில்லியன் டாலரை பெறுகின்றன. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் 80 மில்லியன் டாலர் வாங்குகிறது. இந்த ஏற்றத்தாழ்வு எங்கிருந்து வருகிறது? என்பது குறித்து நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

- Advertisement -

ஏனென்றால் நாங்கள் முன்னணியில் இருந்த பொழுது நாங்கள் விளையாடுவதை எல்லோரும் விரும்பினார்கள். நாங்கள் குளிர்காலத்தில் மட்டுமே இரண்டு வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை வைத்திருந்தோம். அப்போது ஐசிசிக்கு நாங்கள் பெரிய பண பலமாக இருந்தோம். ஆனால் இப்பொழுது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டுக்கு உதவி தேவைப்படுகிறது என்று எல்லோருக்கும் தெரியும்.

இதையும் படிங்க : ரோஹித் விராட் பும்ரா கிடையாது.. டி20 உலக கோப்பையில் என்னை ஆச்சரியப்படுத்தியது இவர்தான் – ரவி சாஸ்திரி பேச்சு

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்திலிருந்து ஒரு சிறப்பு குழு இது பற்றி பேசுவதற்கு ஐசிசி அமைப்புக்கு செல்ல வேண்டிய நேரம் இது என நான் நினைக்கிறேன். தேவைப்பட்டால் 10 அல்லது 12 அதற்கு மேற்பட்ட நபர்கள் கொண்ட குழு செல்லலாம். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டுக்கு சில சிறப்பு பகிர்வுகள் தேவை என ஐசிசி இடம் நாம் கூற வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -