எங்க அகிப் ஜாவேத் தத்துவத்தை ஏத்துக்கோங்க கம்பீர்.. அவர் செஞ்சதை செய்யுங்க – பாக் பசித் அலி வேண்டுகோள்

0
108
Basit

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பசித் அலி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

இந்திய அணியில் தற்போது மூத்த வீரர்கள் யாருமே சரியான முறையில் செயல்படவில்லை. மேலும் எதிர்கால வீரராக கருதப்பட்ட சுப்மன் கில்லும் ஏமாற்றம் தந்தார். பவுலிங் யூனிட்டிலும் பும்ராவுக்கு நல்ல ஆதரவு கிடைக்கவில்லை. தற்போதைக்கு பேட்டிங் யூனிட்டில் ஜெய்ஸ்வால் மட்டுமே நம்பிக்கை தருகிறார். எனவே இந்திய அணியை சுற்றி நிறைய எதிர்மறையான விஷயங்கள் சென்று கொண்டிருக்கிறது.

- Advertisement -

பாகிஸ்தான் கிரிக்கெட்டும் இந்திய கிரிக்கெட்

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தான் கிரிக்கெட் குழப்பமான சூழ்நிலையில் சிக்கி இருந்தது போல, தற்போது இந்திய அணியும் குழப்பமான சூழ்நிலைக்குள் நுழைந்து இருக்கிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இதிலிருந்து வெளிவருவதற்கு ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு மேல் எடுத்துக் கொண்டிருக்கிறது.

அதே சமயத்தில் இந்திய அணியிடம் நிறைய திறமையான இளம் வீரர்கள் இருக்கின்ற காரணத்தினால், யார் சரியாக விளையாடுகிறார்களோ அவர்களுக்கு மட்டும் வாய்ப்பு தந்து, சரியாக விளையாடாதவர்கள் எவ்வளவு பெரிய வீரர்களாக இருந்தாலும் அவர்களை உடனுக்குடன் நீக்குவதின் மூலம், இந்திய கிரிக்கெட் வாரியத்தால் இந்த கடினமான சூழ்நிலையை எளிதாக சமாளிக்க முடியும் என்று கருதப்படுகிறது.

- Advertisement -

பாகிஸ்தான் வழியில் கம்பீர் வரவேண்டும்

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியில் சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை அகிப் ஜாவேத் முடிவுக்கு கொண்டு வந்ததாகவும், அணியில் தனிப்பட்ட வீரர் யாரும் முக்கியமில்லை, அணியில் உள்ள அனைவருமே சமமானவர்கள் என்று அவர் புரிய வைத்து, பாகிஸ்தான் கிரிக்கெட்டை நல்ல நிலைக்கு கொண்டு வருவதற்கு வழி அமைத்துள்ளதாகவும் இதை கம்பீரும் பின்பற்றுமாறும் பசித் அலி கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க : டிராவிட் ஐபிஎல் கோப்பையை வெல்லலை.. ஆனா இதை கம்பீர் அவர் கிட்ட கத்துக்கணும் – முகமது கைஃப் அறிவுரை

இது குறித்து பசித் அலி கூறும் பொழுது “கம்பீர் அகிப் ஜாவேத்தின் தத்துவத்தை ஏற்றுக் கொள்வதற்கு இதுவே சரியான நேரமாக இருக்கும். கிரிக்கெட்டுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். சரியாக விளையாடாதவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அணிக்கு வெளியே இருக்க வேண்டும். பாகிஸ்தான் அணியில் யார் தங்களை முக்கியம் என்று நினைத்தாலும், அவர்களிடம் அகிப் ஜாவேத் அப்படி கிடையாது அனைவரும் சமம் என்று காட்டினார். இதை கம்பீரும் செய்ய வேண்டும் சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -