இந்திய கிரிக்கெட் அணியின் மகத்தான வீரராக திகழ்ந்த கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர், இந்திய கிரிக்கெட்டின் அடையாளமாக திகழ்கிறார்.
சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் சச்சின் அடித்திருக்கும் நிலையில் தனக்கு மிகவும் சிறப்பான சதம் என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரவீன் ஆம்ரே கருத்துக்கள் பேசியிருக்கிறார்.
இந்திய கிரிக்கெட்டின் முடி சூடா மன்னனாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தமாக 30 ஆயிரம் ரன்கள் அடித்திருக்கிறார். இந்த அவரது சாதனையை கடப்பது என்பது அவ்வளவு எளிதில் எந்த கிரிக்கெட் வீரராலும் முடியாத ஒன்றாகும். தனது 24 வருட கிரிக்கட் வாழ்க்கையில் பல மறக்க முடியாத இன்னிங்ஸ்கள் விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழ்நிலையில் 1992 ஆம் ஆண்டு அவருக்கு 18 வயதாக இருந்தபோது பலமான ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அவர் அடித்த மூன்றாவது டெஸ்ட் சதம் மிகவும் சிறப்பான சதம் என்று இந்திய முன்னால் கிரிக்கெட் வீரர் பிரவீன் ஆம்ரே பேசி இருக்கிறார். அப்போது ஆஸ்திரேலியா அணியில் பல ஜாம்பவான் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ஒரு இந்திய வீரர் இந்த சாதனையை நிகழ்த்துவது என்பது அவ்வளவு சாதாரணம் கிடையாது என்று வியந்து பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “அவரது நூற்றுக்கணக்கான சதங்களில் பெர்த்தில் அவருக்கு 18 வயதாக இருந்தபோது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அவர் அடித்த மூன்றாவது சதம் மிகவும் ஸ்பெஷல் ஆனதாகும். அன்று நான் 12வது நபராக ட்ரெஸ்ஸிங் ரூமில் ஒரு அரை தோழனாக அவருடன் இருந்தேன். அவர் விளையாடியதை அப்போது நான் நேரில் நான் கண்டு ரசித்தேன்.
இதையும் படிங்க:என் தம்பி எனக்கு ஆடறப்ப ஐடியா சொல்றது கோபம் வரும்.. ஆனா நான் இதுதான் செய்வேன் – சர்பராஸ் கான் பேச்சு
ஆடுகளத்தில் அப்போது பெரிய விரிசல்கள் காணப்பட்டது. அப்போது சச்சின் அந்த விரிசல்கள் மேல் தனது பேட்டை வைத்து உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்களுக்கு எதிராக பந்து எந்த திசையிலும் செல்லக்கூடிய ஒரு மேற்பரப்பில் தனது வயதிற்கு அப்பாற்பட்ட திறமை மற்றும் தரத்தை அவர் அன்று வெளிப்படுத்தினார். 1992 ஆம் ஆண்டு அவர் அடித்த அந்த சதம் இதுவரை நான் கண்ட சதங்களில் மிகவும் சிறந்த ஒன்று” என்று அவர் பேசியிருக்கிறார்.






