தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த சுழல் பந்துவீச்சாளர்களாக 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடி இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் இருவரும் இருக்கிறார்கள். இந்த நிலையில் இலங்கையின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் ரங்கனா ஹெராத் இன்னொரு சுழல் பந்துவீச்சாளரையும் சிறந்தவர் என்று கூறியிருக்கிறார்.
இலங்கை கிரிக்கெட்டில் தலைசிறந்த சுழல் பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரனுக்கு பிறகு ரங்கனா ஹெராத் மிகவும் முக்கியமான சுழல் பந்துவீச்சாளராக இருந்திருக்கிறார். இடது கை சுழல் பந்துவீச்சாளரான இவர் முத்தையா முரளிதரன் உடன் நல்ல கூட்டணி அமைத்து பந்து பேசி இருக்கிறார்.
ரங்கனா ஹெராத் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 93 போட்டிகளில் 433 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். மேலும் 71 ஒருநாள் போட்டிகளில் 74 விக்கெட்டுகள், 17 சர்வதேச டி20 போட்டிகளில் 18 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். மூன்று வடிவத்திலுமே இலங்கை அணிக்கு விளையாடிய சுழல் பந்துவீச்சாளராக தன்னுடைய காலத்தில் இருந்தார்.
இலங்கை கிரிக்கெட்டில் முத்தையா முரளிதரன் ஓய்வு பெற்றதற்கு பிறகு சிறிது காலம் ரங்கனா ஹெராத் விளையாடினார். பிறகு இவரும் ஓய்வு பெற்றதை அடுத்து இலங்கை கிரிக்கெட்டில் குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தரமான சுழல் பந்துவீச்சாளர்கள் இல்லாமல் ஒரு பெரிய தேக்க நிலை ஏற்பட்டது. தற்பொழுது அது பிரபாத் ஜெயசூர்யா வருகைக்குப் பின்பு ஓரளவுக்கு சரி செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் தற்போது உலகக் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த சுழல் பந்துவீச்சாளர்கள் மற்றும் தனக்கு பிடித்த சுழல் பந்துவீச்சாளர்கள் யார் என்பது குறித்து ரங்கனா ஹெராத் கூறியிருக்கிறார். இதில் சர்வ நிச்சயமாக இடம்பெறக்கூடிய இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் இருவரும் இடம் பெற்று இருக்கிறார்கள்.
இதையும் படிங்க : இந்தியா இலங்கை சீரிஸ்.. அந்த வீரர் ஹீரோ மாதிரி ஓவரா பண்றாரு.. ஆனா சரக்கே இல்ல – ஸ்ரீகாந்த் விமர்சனம்
இது குறித்து ரங்கனா ஹெராத் கூறும்பொழுது “விரல் சுழல் பந்துவீச்சாளர்களை எடுத்துக் கொண்டால் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் நாதன் லயன் இருவரும் கண்டிப்பாக சிறந்தவர்களாக இருக்கிறார்கள். அதேபோல் இந்த வரிசையில் நான் தென் ஆப்பிரிக்காவின் கேசவ் மகாராஜையும் பார்க்கிறேன். மேலும் குல்தீப் யாதவ் பந்துவீச்சை பார்ப்பது எனக்கு மிகவும் விருப்பமானது. மேலும் பிரபாத் ஜெயசூர்யாவும் நிச்சயம் நான் கவனிக்க கூடியவர்களில் ஒருவர்” என்று கூறி இருக்கிறார்