18வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் திருவிழா இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ள நிலையில், ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் ஒருமுறை வெல்வதற்கு தயாராகி வருகிறது.
இந்த சூழ்நிலையில் சென்னை அணிக்காக விளையாடிய இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் திசரா பெரேரா எம்எஸ் தோனி குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிகரமான கேப்டன் ஆக திகழ்ந்த மகேந்திர சிங் தோனி இதுவரை சென்னை அணிக்காக 2010 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை ஐந்து ஐபிஎல் கோப்பைகளை வெற்றி பெற்று கொடுத்து விட்டு தனது கேப்டன் பதவியில் இருந்து விலகினார். ஆனால் விளையாடிய அனைத்து சீசன்களிலும் சென்னை அணி ஒரு சில சீசனைத் தவிர மற்ற அனைத்து தொடரிலும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிவிடும்.
இந்த சூழ்நிலையில் 2010 ஆம் ஆண்டு சென்னை அணிக்காக ஒரு சில போட்டிகளில் விளையாடிய இலங்கை அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் திசரா பெரேரா தற்போது ஏசியன் லெஜன்ட் லீக் டி20 தொடரில் விளையாடி வருகிறார். இந்த சூழ்நிலையில் அவரிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்தும் மகேந்திர சிங் தோனி குறித்தும் சில விஷயங்கள் பேசுமாறு கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அவர் “மகிபாய் ஹோட்டல் ரூமில் தனது அறை கதவுகளை எப்போதுமே திறந்து வைத்திருப்பார் என்று சொல்ல விரும்புகிறேன். அவர் தூங்குவாரா இல்லையா என்பது முக்கியம் கிடையாது. ஆனால் அவரது அறையின் கதவு எப்போதும் திறந்தே இருக்கும் அவரது அறைக்கு எதிர் அறையில் நான் தங்கி இருந்தேன். அதனால் அங்கு எனக்கு பார்க்க முடிந்தது, அவரது ரூமில் இரட்டை பூட்டு மட்டுமே இருக்கும். அவரது ரூமிற்கு எல்லோருமே வந்து போவார்கள், அவர் ஒரு நல்ல மனிதர்.
இதையும் படிங்க:பாவம் மும்பை அணி.. பும்ரா இல்லனா.. வில் ஜாக்ஸ் கண்டிப்பா விளையாட மாட்டார்.. இதான் காரணம் – ஆகாஷ் சோப்ரா
தோனியின் குணம் வித்தியாசமானது, நான் அணியில் சேர்ந்த போது முதல் நாள் கூட்டத்திற்கு சென்றேன். அப்போது தோனி ‘நீங்கள் அனைவரும் நன்றாக தயாராக இருக்கிறீர்கள். அதனால்தான் நாங்கள் உங்களை தேர்ந்தெடுத்தோம். எனவே எங்களுக்கு எந்த ஒரு சந்திப்பும் தேவையில்லை. இதுவே நமது முதல் மற்றும் கடைசி சந்திப்பும் கூட’ என்று பேசியிருந்தார். நான் ஐபிஎல் தொடருக்கு வந்த போது ஒவ்வொரு நாளும் மீட்டிங் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் சிஎஸ்கேவில் பெரிய அணி கூட்டம் எதுவும் இல்லை அதுதான் என் கிரிக்கெட் வாழ்க்கையின் கலாச்சாரத்தை மாற்றியது” என்று பேசி இருக்கிறார்.