அஸ்வினை விட லயன்தான் சிறந்த ஸ்பின்னர்.. அவர்கிட்ட இந்த விஷயம் பெருசா இருக்கு – பால் ஆடம்ஸ் கணிப்பு

0
63
Adams

தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த சுழல் பந்துவீச்சாளர்களான நாதன் லயன் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இருவரில் நாதன் லயன் முழுமையான ஸ்பின்னர் ஆக இருப்பதாக தென் ஆப்பிரிக்க முன்னாள் ஸ்பின்னர் பால் ஆடம்ஸ் கருத்து தெரிவித்திருக்கிறார்.

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் வருகின்ற நவம்பர் 22ஆம் தேதி ஆஸ்திரேலியா பெர்த் மைதானத்தில் தொடங்க இருக்கிறது. இந்த தொடரில் தலைசிறந்த இந்த இரண்டு சுழல் பந்துவீச்சாளர்களும் சந்தித்துக் கொள்ள இருக்கிறார்கள்.

- Advertisement -

கடைசிப் பயணம் கடைசி மோதல்

ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு இதுவே கடைசி ஆஸ்திரேலியா கிரிக்கெட் சுற்றுப்பயணமாக இருக்கலாம். ஏனென்றால் இன்னும் மூன்று ஆண்டுகளுக்கும் மேல் கழித்து இந்திய அணி அங்கு செல்லும் பொழுது ரவிச்சந்திரன் அஸ்வின் பெரும்பாலும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக இருக்கிறது.

அதேபோல தற்போதைய சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தலைசிறந்த சுழல் பந்துவீச்சாளர்களான ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் நாதன் லயன் இருவரும் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் கடைசி டெஸ்ட் தொடராகவும் இது அமையலாம். ஏனென்றால் அடுத்து ஆஸ்திரேலியா இந்தியா வரும்பொழுது இருவரில் ஒருவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று இருக்கலாம்.

- Advertisement -

அதிக விக்கெட்டுகளுக்கு நடக்கும் ரேஸ்

தற்போது ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 129 போட்டிகள் விளையாடி 530 டெஸ்ட் கிரிக்கெட் விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 536 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். தற்போது அதிக வீழ்த்தியவர்களுக்கான போட்டி இவர்களுக்கு இடையே கடுமையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இந்த இருவர் பற்றி பேசி இருக்கும் பால் ஆடம்ஸ் கூறும் பொழுது “துணை கண்டம், ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதற்கு அஸ்வினை விட நாதன் லயன் முழுமையான விளையாட்டை கொண்டு இருக்கிறார்”

இதையும் படிங்க : 9 ஓவர் அசத்தல்.. ஐபிஎல் அணிகளை திரும்பிப் பார்க்க வைத்த அர்ஜுன் டெண்டுல்கர்.. மெகா ஏலத்தில் வாய்ப்பு

“அஸ்வின் ஒரு பந்தை கேரம் பால் முறையில் எதிர் திசையில் திருப்பும் திறமை பெற்றவர். ஆனால் நாதன் லயன் வழக்கமான திசையில் பந்தை அதிகமாக திருப்பக் கூடியவர். இது பேட்ஸ்மேன்களுக்கு தொந்தரவு செய்யக்கூடியதாக இருக்கிறது. இதனால் அஸ்வினை விட அவர் வெற்றிகரமாக இருக்கிறார்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -