கில்லெஸ்பி தந்திரமா மோசமா இந்திய பிட்ச்ச இப்படி திட்டினவரு.. பாகிஸ்தான் கிரிக்கெட்ட காப்பாத்துவாரு – ஆடம் கில்கிறிஸ்ட் நம்பிக்கை

0
26
Gilchrist

பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவின் முன்னால் வீரர் ஜேசன் கில்லஸ்பி இருந்து வருகிறார். இந்த நிலையில் அவரால் பாகிஸ்தான் கிரிக்கெட்டை கடினமான காலகட்டத்தில் இருந்து வெளியில் கொண்டுவர முடியும் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் கூறியிருக்கிறார்.

தற்போது பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சொந்த நாட்டில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது. இதற்கு பாகிஸ்தான் டெஸ்ட அணியின் தலைமை பயிற்சியாளர் ஜேசன் கில்லஸ்பி போட்ட தவறான திட்டங்கள் தான் காரணம் என விமர்சனங்கள் கிளம்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பாகிஸ்தான் எடுத்த தவறான முடிவு

பாகிஸ்தான் அணி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக பங்களாதேஷ் அணியிடம் கடந்த டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்தது. மேலும் உள்நாட்டில் நடந்த டெஸ்டில் இது நடந்திருப்பதால் அதிகப்படியான விமர்சனங்களை உருவாக்கியது. மேலும் இந்த தோல்வி குறித்து அனைவரிடமும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்தியது.

இந்த போட்டியில் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் அமைக்கப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டு இருந்தது. இதன் காரணமாக பாகிஸ்தான் பிளேயிங் லெவனில் நான்கு வேகப் பந்துவீச்சாளர்கள் இடம்பெற்று இருந்தார்கள். மேலும் பதினைந்து பேர் கொண்ட அணியில் ஒரு பிரதான சுழல் பந்துவீச்சாளர் கூட இல்லை. ஆனால் ஆடுகளம் எதிர்பார்த்தபடி அமையாமல் பாகிஸ்தான அணி தோல்வி அடைந்து விட்டது.

- Advertisement -

கில்லஸ்பி ராஜதந்திரி

தற்போது கில்லஸ்பி பற்றி பேசி இருக்கும் ஆடம் கில்கிறிஸ்ட் கூறும் பொழுது “கில்லஸ்பி மிகவும் சவாலான மற்றும் கடினமான நேரங்களில் சாதுரியமாக திறமையாக செயல்பட கூடியவர். இதை நான் முன்பே கூறியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். இந்தியாவில் விளையாட முடியாத அளவுக்கு ஒரு மோசமான ஆடுகளத்தில் நாங்கள் இரண்டு நாட்களில் தோல்வி அடைய வேண்டியதாக இருந்தது”

“அந்த ஆடுகளத்தை பற்றி வெளிப்படையாக விமர்சனத்தை வைத்தால் அபராதம் அல்லது போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட வாய்ப்பு இருந்தது. இந்த நிலையில் இது குறித்து கில்லஸ்பி இடம் கேட்ட பொழுது அவர் மிகத் தந்திரமாக ‘பாருங்கள் நான் இதைப் பற்றி கருத்து தெரிவிக்க முடியாது. ஆனால் என்னுடைய நண்பர் ஒருவர் எனக்கு மெசேஜ் செய்து அவர் கண்டிராத மிக மோசமான ஆடுகளம் என்று கூறியிருந்தார்’ என்று தன் கருத்தை சமயோசிதமாக வெளிப்படுத்தினார். இதில் ஒரு கெட்ட வார்த்தையும் இருந்தது. அந்த அளவிற்கு அவர் தந்திரமானவர்”

இதையும் படிங்க : 3 நாளில் 2 சதங்கள்.. ஜோ ரூட் 2 சரித்திர சாதனை.. லார்ட்ஸ் மைதானத்தில் புது வரலாறு.. இலங்கை 2வது டெஸ்ட்

“எனவே இதுதான் கில்லஸ்பியின் ராஜதந்திரம். அவரின் மூளை உடன் இருப்பவர்களை பாதுகாத்து ஒரு கவசம் போல் தந்திரமாக செயல்படும்.பெரிய மனிதர்களிடமிருந்து எப்பொழுதும் நான் இதுபோன்ற விஷயங்களையே பார்க்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -