இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது. ஏற்கனவே நடைபெற்ற இரண்டு ஆட்டங்களிலும் இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா தலா ஒரு வெற்றியை பெற்று இருக்கின்றன.
இந்த சூழ்நிலையில் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் பால் ஆடம்ஸ் வருண் சக்கரவர்த்தி குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
இந்தியா தென் ஆப்பிரிக்கா டி20 தொடர்
இந்திய கிரிக்கெட் அணிக்கு தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில் முதல் போட்டியில் இந்திய அணியும் இரண்டாவது போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியும் வெற்றி பெற்றுள்ளன. இந்த சூழ்நிலையில் இன்னும் இரண்டு ஆட்டங்கள் மீதம் இருக்கும் நிலையில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
அதிலும் குறிப்பாக இந்திய அணியின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளராக மாறிவரும் வருண் சக்கரவர்த்தி இரண்டு டி20 போட்டிகளிலும் தனது சிறந்த பந்துவீச்சினை வெளிப்படுத்தி இருக்கிறார். முதல் போட்டியில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில் இரண்டாவது போட்டியில் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தி தனது திறமையை நிரூபித்து இருக்கிறார். இந்த சூழ்நிலையில் முன்னாள் தென்னாப்பிரிக்க சுழற் பந்துவீச்சாளர் பால் ஆடம்ஸ் வருண் சக்கரவர்த்தி குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
வருண் சக்கரவர்த்தியின் சிறப்பான பந்துவீச்சு
இதுகுறித்து அவர் கூறும் போது “வருண் சக்கரவர்த்தி பந்து வீசும் போது அவர் லென்த்தை கண்ட்ரோல் செய்யும் விதம் அற்புதமாக இருக்கிறது. கூக்லி மற்றும் லெக்ஸ்பின் சிறப்பாக வீசுகிறார். குறிப்பாக அவர் கூக்லி பந்துவீச்சில் அவர் பந்தை ரிலீஸ் செய்யும் விதம் அற்புதமாக இருக்கிறது. ஒரு பேட்ஸ்மேனுக்கு எவ்வாறு பந்துவீச்சின் மூலம் சவால் விடுவது என்பதில் தனது திறமையை வெளிப்படுத்துகிறார்.
இதையும் படிங்க:விராட் ரோகித் சத்தியம் பண்ணி சொல்றேன்.. எங்க ஆளுங்க உங்களுக்கு இத நிச்சயம் செய்வாங்க – பிரட் லீ எச்சரிக்கை
மேலும் பேட்ஸ்மேன் அந்த நேரத்தில் அவரை எப்படி கையாள்வது என்பது குறித்து சற்று தடுமாறி விடுகின்றனர். எனவே மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் அவரை எப்படி கையாள்வது என்பது குறித்து சில திட்டங்களை தென் ஆப்பிரிக்க அணி வகுத்து இருக்கிறது” என்று பால் ஆடம்ஸ் கூறியிருக்கிறார். மூன்றாவது போட்டி இன்று நடைபெற இருக்கும் நிலையில் இதில் வெற்றி பெறுவதற்கு இரண்டு அணிகளும் கடும் சவால் அளிக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.






