ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு முன்பாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுக்கு ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் பிரட் லீ முக்கியமான அறிவுரை ஒன்றை கூறியிருக்கிறார்.
இந்திய அணி இந்த மாதம் 22ஆம் தேதி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பெர்த் மைதானத்தில் விளையாடுகிறது. மேலும் இந்திய மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி ஒயிட் வாஸ் ஆகிய காரணத்தினால் தன்னம்பிக்கை சற்று குறைவாக காணப்படுகிறது.
கவலை தரும் ரோஹித் சர்மா விராட் கோலி ஃபார்ம்
இந்த ஆண்டில் ரோகித் சர்மா 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 29.40 ரன் ஆவரேஜில் 588 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். இதில் இரண்டு சதங்கள் மற்றும் இரண்டு அரை சதங்கள் அடக்கம். விராட் கோலி 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 22.72 ரன் ஆவரேஜில் ஒரு அரைசதத்துடன் 250 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார்.
இவர்கள் இருவரும் இந்திய அணியின் மூத்த பேட்ஸ்மேன்கள் என்பது மட்டும் இல்லாமல் டாப் ஆர்டர் பேட்மேன்களாக இருக்கிறார்கள். இவர்கள் இருவருடைய பேட்டிங் ஃபார்ம் மோசமாக இருக்கின்ற காரணத்தினால், இந்திய அணியின் மிடில் ஆர்டருக்கு எக்கச்சக்க அழுத்தம் உருவாகிவிடுகிறது. எங்காவது அவர்களும் சரிந்தால் இந்திய அணி மிகக் குறைந்த ரன்னில் ஆல் அவுட் ஆகும் அபாயமும் இருக்கிறது.
சத்தியம் செய்து சொல்கிறேன்
எனவே ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் சராசரியாகவாவது செயல்பட வேண்டிய அவசியம் இருக்கிறது. அப்பொழுதுதான் இளம் வீரர்களான ஜெய்ஸ்வால், கில், ரிஷப் பண்ட் மற்றும் ஜுரல் போன்ற இளம் வீரர்களுக்கு அதிக அளவில் அழுத்தம் ஏற்படாமல் தவிர்க்க முடியும்.
தற்பொழுது இதுகுறித்து பேசியிருக்கும் பிரட் லீ கூறும் பொழுது “உங்களுக்கு இரண்டு மோசமான ரன்கள் இருந்தால் உடனடியாக அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் மீண்டும் செல்ல வேண்டும். அவர்கள் தங்களுடைய அடிப்படை விஷயங்களில் வேலை செய்ய வேண்டும். அவர்கள் தங்களின் பேட்டிங் நுட்பத்தை மீண்டும் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும்”
இதையும் படிங்க : கோலியும் நானும் பலமுறை இத பேசிருக்கோம்.. அந்த போட்டில அது நடந்திருந்தா ஆர்சிபிதான் சாம்பியன் – கேஎல் ராகுல் பேட்டி
“இருவருமே கிரிக்கெட்டில் இருந்து இயன்றவரை விலகி இருக்க வேண்டும். பின்னர் இருவரும் ஆஸ்திரேலியாவிற்கு வரும்பொழுது புத்துணர்ச்சியுடன் சிறப்பாக தொடர் முழுவதும் இருக்க முடியும். நான் உங்களுக்கு சத்தியம் செய்கிறேன், புதிய பந்தில் எங்களுடைய வேகப்பந்து வீச்சாளர்கள் ரோஹித் சர்மாவை நிச்சயம் தாக்குவார்கள்” என்று கூறியிருக்கிறார்.






