விராட் கோலியின் 4ம் இடத்திற்கு அந்த 33 வயது வீரர்தான் தகுதியான நபர்.. அவர்தான் வரணும் – அனில் கும்ப்ளே பேட்டி

0
446

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக வருகிற ஜூன் இருபதாம் தேதி முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. வலுவான அணிகளில் ஒன்றான இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளும் நிலையில் முக்கிய வீரரான விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் அவரது இடத்தை நிரப்புவதற்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் அணில் கும்ப்ளே சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

விராட் கோலி ஓய்வு

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் விராட் கோலி நேற்று டெஸ்ட் பார்மெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். 36 வயதான விராட் கோலி இன்னும் சில ஆண்டுகள் தாராளமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு உடல் தகுதி இருந்தும் ஓய்வினை அறிவித்திருப்பது பலரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே விராட் கோலியின் இடத்திற்கு கருண் நாயர் பொருத்தமாக இருப்பார் என அதற்கான காரணங்களை கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது ” உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் கருண் நாயர் இந்திய அணியில் இடம்பெறுவதற்கு தகுதியானவர். எனவே அவர் விராட் கோலியின் நான்காவது இடத்தில் களமிறங்கலாம். இங்கிலாந்தில் முக்கியமான நான்காவது இடத்தில் களமிறங்கி விளையாடுவதற்கு குறிப்பிட்ட அனுபவம் தேவை. கருண் நாயர் இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட் விளையாடி இருக்கிறார்.

- Advertisement -

அவருக்கு வாய்ப்பு கொடுங்க

அவருக்கு இங்கிலாந்தில் உள்ள நிலைமைகள் குறித்து நன்றாக தெரியும். எனவே அவர் இந்திய அணியில் சேர்வதற்கு தகுதியான வீரராக இருப்பார். மேலும் இந்தியாவில் இளைஞர்களும் இருக்கிறார்கள். சாய் சுதர்சன் இருக்கிறார் என்பது குறித்து தெரியவில்லை. மேலும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒரு பகுதியாக இருந்த அபிமன்யு ஈஸ்வரன் இருக்கிறார். ஆனால் இவர்கள் குறித்த தகவல் இன்னும் உறுதியாக தெரியவில்லை. ஏனென்றால் அவ்வப்போது நாங்கள் வடிவங்களை கலைப்பது வழக்கம். இன்றைய சமூக ஊடகப் பரிமாற்றங்கள் அதிகமாக இருப்பதால் ஒருநாள் கிரிக்கெட்டை டெஸ்ட் கிரிக்கெட் அல்லது முதல் தர போட்டியோடு கலக்காத அளவுக்கு பார்க்கிற பொது மக்கள் இதையெல்லாம் பார்த்து மகிழ்வார்கள் என்று நம்புகிறேன்.

இதையும் படிங்க:ஐபிஎல் உங்க பிரச்சனை.. எங்க வீரர்கள் இந்த தேதிக்குள் நாடு திரும்பியே ஆகணும்.. தென் ஆப்பிரிக்கா கோச் அதிரடி

முதல் தர மட்டத்தில் சிறப்பாக விளையாடியவர்களுக்கு நிச்சயமாக இந்திய அணிக்காக விளையாடுவதற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். கருண் நாயர் போன்ற உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடியவர்கள் இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தால், அவரைப் போன்ற உள்நாட்டு கிரிக்கெட் சிறப்பாக விளையாடி வருபவர்களுக்கு அதிக அளவில் நம்பிக்கை கிடைக்கும்” என பேசி இருக்கிறார். கருண் நாயருக்கு தற்போது 33 வயதாகி வருவது குறிப்பிடத்தக்கது. அவர் இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் இந்திய அணிக்காக சில ஆண்டுகள் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கலாம்.

- Advertisement -