இந்திய கிரிக்கெட்

விராட் கோலியின் இடத்தில் மட்டும் அவர் களமிறங்கினா.. அவரோட பேட்டிங் ஃபார்ம் வேற லெவல்ல இருக்கும் – டேல் ஸ்டெயின் கருத்து

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையே கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியானது நாளை நடைபெற உள்ள நிலையில் எந்த அணி வெற்றி பெற்ற தொடரை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின், இந்திய பேட்டிங் வரிசை குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரானது இந்திய அணியின் கேப்டன் சுப்மான்கில் காயமடைந்து வெளியேறிய நிலையில் அவருக்கு பதிலாக கே.எல். ராகுல் கேப்டனாக பொறுப்பேற்று அணியை சிறப்பாக வழி நடத்திக் கொண்டிருக்கிறார். மேலும் பேட்டிங் வரிசையிலும் ஆறாவது இடத்தில் களம் இறங்கி பொறுப்பான ஆட்டத்தை விளையாடி அதே நேரத்தில் அணிக்கு தேவைப்படும் சமயத்தில் அதிரடியான ஆட்டத்தையும் வெளிப்படுத்தி தனது திறமையை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

கேஎல் ராகுல் தொடர்ச்சியாக இரண்டு அரை சதங்கள் அடித்திருக்கும் நிலையில் இந்திய அணியின் அனுபவ வீரராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். இந்த சூழ்நிலையில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான டேல் ஸ்டெயின், கேஎல் ராகுல் ஒருவேளை மூன்றாவது வரிசையில் களம் இறங்கி விளையாடினால் அவரது பேட்டிங் திறன் இன்னும் சிறப்பாக இருக்கும் எனவும் அவரால் அந்த இடத்தில் சதங்களும் அடிக்க முடியும் என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “கே எல் ராகுலுக்கு எப்படி செயல்பட வேண்டும் என்று நன்றாக தெரியும். மீண்டும் அவர் மூன்றாவது வரிசையில் பேட்டிங் செய்தாலோ அல்லது தொடக்க இடத்தில் களம் இறங்கினாலோ அவரால் சதங்கள் நிச்சயமாக அடிக்க முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஆனால் அந்த இடங்கள் மற்ற வீரர்களுக்கானவை. மேலும் அவரால் என்ன செய்ய முடியும் என்று அவருக்குத் தெரியும். கடந்த இரண்டு போட்டிகளில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதையும் படிங்க:இந்த 1 காரணமே போதும்.. 4வது இடத்துக்கு அவர் ஏன் தகுதியானவர் என்று காட்டி இருக்காரு – ரவிச்சந்திரன் அஸ்வின்

கே எல் ராகுல் முதல் போட்டியில் சிறப்பான பேட்டிங் திறனை வெளிப்படுத்தினார். அது மட்டுமல்லாமல் தனது அணியையும் மிகச் சிறப்பாக வழி நடத்தினார். இதனால் அவரின் திறன் அவர் எப்படி செயல்பட வேண்டும் உள்ளிட்ட விஷயங்கள் அவருக்கு நன்றாக தெரியும்” என்று ஸ்டெயின் கூறி இருக்கிறார். மேலும் கடைசி போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில் நீங்கள் வெற்றி பெற்று எப்படியாவது தொடரையை கைப்பற்றி விட வேண்டும் என்று இரண்டு அணிகளும் போராடும் என்பதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. மேலும் கே.எல் ராகுல் விராட் கோலியின் இடத்தில் களஞ்சிறங்கினால் அவரால் சிறப்பாக செயல்பட முடியும் என்று நம்புகிறார்.

- Advertisement -
Published by