இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போன்று உலக நாடுகளில் தற்போது டி20 கிரிக்கெட் லீக் தொடர்கள் நடைபெற்று வருகிறது.
இந்த சூழ்நிலையில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ டி20 கிரிக்கெட் லீக் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மிகவும் பிரபலமாக நடைபெற்று வரும் பிரான்சிஸ் டி20 லீக் தொடராகும். இதில் இந்திய வீரர்கள் மட்டுமின்றி உலகின் பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் இந்த தொடரில் விளையாடுவதால் இது உலகப் புகழ்பெற்று விளங்குகிறது. அதேபோல உலகமெங்கிலும் டி20 லீக் தொடர்கள் நடைபெற்று வரும் நிலையில் ஓய்வு பெறாத இந்திய வீரர்கள் கலந்து கொள்ள ஐபிஎல் வாரியம் அனுமதிப்பதில்லை.
இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட எஸ்ஏ டி20 கிரிக்கெட் லீக் தொடர், மற்ற நாட்டு கிரிக்கெட் வீரர்கள் விளையாடிய புகழ்பெற்று விளங்கினாலும் இந்திய வீரர்கள் விளையாடத காரணத்தால் அது இந்திய அளவில் பெரிதாக பிரபலமடையவில்லை. இதனால் இது இந்திய ரசிகர்களின் மத்தியில் பெரிய அளவில் கவனிக்கப்படாத தொடராக உள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஏபி டிவில்லியர்ஸ், இந்திய முன்னாள் வீரர்களுக்கு எஸ்ஏடி 20 தொடரில் விளையாடும் படி அழைப்பு விடுத்திருக்கிறார். இது ஐபிஎல் தொடர் போன்று தென்னாபிரிக்க கிரிக்கெட் வாரியத்திற்கு பொருளாதார அளவில் இந்த தொடர் இந்திய வீரர்கள் விளையாடுவதால் கை கொடுக்கும் என்று பெரிய அளவில் நம்புகிறார். கடந்த தொடரில் தினேஷ் கார்த்திக் விளையாடிய நிலையில் தற்போது நடைபெற்று முடிந்த ஏலத்தில் எந்த இந்திய வீரர்களும் கலந்து கொள்ளாதது குறித்து டிவில்லியர்ஸ் தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.
இதையும் படிங்க:ஷாகின் அப்ரிடி மாஸா திரும்ப வந்துட்டார்.. நேர்ல அந்த விஷயத்தை பார்த்தேன் – இந்திய அணிக்கு எச்சரிக்கை தரும் வாசிம் அக்ரம்
இதுகுறித்து டிவிலியர்ஸ் கூறும்போது “துரதிஷ்டவசமாக இந்த ஏலத்தில் இந்த இந்திய வீரர்களின் பெயரும் இல்லாதது எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது. இந்தத் தொடரில் பங்கேற்காத இந்திய வீரர்களின் சங்கிலிகளையும் தடைகளையும் உடைத்து எரிய முடியும் என்று நான் நம்புகிறேன். தயவுசெய்து, தயவு செய்து, ‘என் இந்திய நண்பர்களே முன்னாள் வீரர்களே பிசிசிஐயால் வெளிப்படையாக ஒப்பந்தம் செய்யாத வீரர்கள் உங்கள் பெயர்களை தொப்பியில் போட்டுக் கொண்டு தென்னாப்பிரிக்காவில் கொஞ்சம் கிரிக்கெட் விளையாட வாருங்கள்” என்று கூறியிருக்கிறார்.






