அடுத்த மாதம் இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்க இருக்கும் டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை தென் ஆப்பிரிக்கா அணி வீழ்த்த வேண்டும் என அந்த அணியின் முன்னாள் கேப்டன் கிரிம் ஸ்மித் கூறியிருக்கிறார்.
2024 ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி உலகக் கோப்பையை கைப்பற்றிய இருந்தது குறிப்பிடத்தக்கது.
நாங்கள் அவர்களை தோற்கடிக்க வேண்டும்
இந்த நிலையில் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியை இறுதிப் போட்டிகள் வைத்து தென் ஆப்பிரிக்கா அணி வீழ்த்த வேண்டும் என கிரி
ம் ஸ்மித் விரும்புகிறார். மேலும் இந்திய அணியின் சுழல் பந்து வீச்ச தாக்குதலை எதிர்கொள்ள அவர்கள் மிடில் ஆர்டரில் பலம் இருப்பதாக நம்புகிறார்.
இதுகுறித்து அவர் பேசும் பொழுது “வெளிப்படையாக இறுதிப் போட்டியில் வைத்து இந்திய அணியை வீழ்த்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நாங்கள் சமீபத்தில் இந்தியாவில் பெற்ற டெஸ்ட் வெற்றி அற்புதமானது. இந்தியா சுற்றுப்பயணம் செய்வதற்கு மிகவும் கடினமான ஒரு நாடு. ஆனால் நாங்கள் ஆதிக்கம் செலுத்திய விதத்தில் நான் ஆச்சரியப்பட்டேன். கடந்த ஒன்றரை வருடங்களாக எங்களுடைய டெஸ்ட் அணி எங்கள் கிரிக்கெட்டின் கலங்கரை விளக்கமாக இருந்து வருகிறது”
எங்களிடம் பலம் உள்ளது
“இந்திய அணிக்கு நிறைய பலம் இருக்கிறது. எனவே அந்த அணியை ஒதுக்கி தள்ளி விட முடியாது. இது அவர்களுடைய சொந்த நாட்டில் நடைபெறக்கூடிய உலக கோப்பை. மேலும் பயிற்சியாளர் கம்பீர் இருக்கும் நேரத்தில் பெரிய வீரர்கள் வெளியேறும் மாற்றம் நடந்து கொண்டிருக்கும் காலகட்டம். எனவே அது எப்படி நிகழ்கிறது என்றும் பார்க்க வேண்டும்”
இதையும் படிங்க : தோனி யுவராஜ் ஆடினதுதான் கஷ்டம்.. விராட் கோலி ஆடுனது ஒண்ணுமே இல்ல – சஞ்சய் மன்ச்ரேக்கர் பேச்சு
“திறமையின் அடிப்படையில் இந்தியா செமி பைனலுக்கு வராவிட்டால் நான் ஆச்சரியப்படுவேன். எங்களுடைய மிடில் ஆர்டரில் இந்திய அணியின் சுழல் பந்துவீச்சை எதிர்த்து விளையாடும் திறமை இருப்பதை நான் பார்க்கிறேன். எனவே விரைவில் ரசிகர்களுக்கு ஒரு நல்ல உலகக் கோப்பை இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.






