நல்லா யோசிங்க.. ஆஸி டெஸ்ட் தோல்விக்கு 2 பேர் மட்டும்தான் காரணமானு தெரியும் – ஜாண்டி ரோட்ஸ் கருத்து

0
1143

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்ற முடிந்த ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்தது.

இந்த சூழ்நிலையில் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜாண்டி ரோட்ஸ் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்

இந்திய அணி கடந்த இரண்டு முறை ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி கோப்பையை வெற்றி பெற்றிருந்த நிலையில் மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றும் நோக்கில் ஆஸ்திரேலியா சென்று ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்து மோசமான தோல்வியை சந்தித்தது. மேலும் இந்திய அணியின் தோல்விக்கு அணியின் சீனியர் வீரர்களாக கருதப்படும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரின் மோசமான பேட்டிங் காரணம் என்று இந்திய முன்னாள் வீரர்கள் முதல் பல்வேறு தரப்பிலிருந்து விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இந்த சூழ்நிலையில் மோசமான பேட்டிங் மற்றும் கேப்டன்சி காரணமாக ரோஹித் சர்மா ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் தானாகவே முன்வந்து கேப்டன் பொறுப்பை விட்டு வெளியேறி பும்ராவிடம் ஒப்படைத்தார். இந்த நிலையில் இந்த தொடரின் தோல்விக்கு விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் மீது அதிகளவிலான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் ஒரு அணியின் தோல்விக்கு இரண்டு பேரை மட்டும் குறை சொல்வது சரியாக இருக்காது என்ற தென்னாபிரிக்க முன்னாள் வீரர் ஜாண்டி ரோட்ஸ் இது குறித்து சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இரண்டு பேர் மீது பழி சொல்வது நியாயம் அல்ல

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது ” பொதுவாக ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் என்பது மிகவும் கடினமானது. கடந்த இரண்டு முறையும் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றதால் இந்திய ரசிகர்கள் இதனை மறந்து விட்டார்கள் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அது எளிதான விஷயம் அல்ல. ஆனாலும் இந்தத் தொடரில் நடைபெற்ற சில போட்டிகள் கடந்த முறையைப் போல மீண்டும் புதுப்பிக்கும் விதமாக அமைந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக வெற்றி பெற முடியவில்லை. எனவே இதில் இரண்டு பேர் மீது மட்டுமே பழி சுமத்துவது சரியாக இருக்காது என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க:51 பந்துகள் மீதம்.. 6 ரன்னில் முதல் வெற்றியை பதிவு செய்த சூப்பர் கிங்ஸ் அணி.. எம்ஐ அணி பரிதாபம்.. எஸ்ஏடி20 லீக்

ஒவ்வொருவருக்கும் அவரவர் கருத்தைச் சொல்ல உரிமை உண்டு. கிரிக்கெட் அப்படிப்பட்ட விளையாட்டு, இந்த காலத்தில் கிரிக்கெட் வீரர்கள் பொது மக்களிடம் இருந்து தப்பிக்க முடியாது என்று நினைக்கிறேன். அது அவர்களை நேசிக்கும் ரசிகர்களாக இருந்தாலும் சரி, சமூக வலைதளங்கள், பத்திரிகைகள், ஊடகங்கள் மூலமாக விமர்சனம் செய்கிற ரசிகர்களாக இருந்தாலும் சரி தற்போது நிபுணர்களாக தெரிகிறார்கள். வேறு வழி இல்லாமல் வீரர்களும் அதனோடு வாழ கற்றுக் கொள்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -