சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் வருகிற 23ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி நடைபெற உள்ள நிலையில் இதில் பாபர் அசாம் மற்றும் விராட் கோலி ஆகியோர் முக்கிய பங்கு வகிப்பார்கள்.
இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்துர் ரவூப் பாபர் அசாம் மற்றும் விராட் கோலி ஆகியோரை விட சிறந்த பேட்ஸ்மேன் இவர்தான் என ஒருவரை தேர்வு செய்திருக்கிறார்.
விராட் கோலி பாபரை விட சிறந்தவர்
சமகால கிரிக்கெட்டில் இந்தியாவின் விராட் கோலி உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக கருதப்படுகிறார். விராட் கோலியின் தரம் மற்றும் திறன் அழுத்தத்தின் கீழ் செயல்படும் அவரது பேட்டிங் திறன் ஆகியவை உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக வைத்திருக்கிறது. மேலும் பாகிஸ்தான் அணியின் பாபர் அசாமும் ஃபார்மில் இருக்கும் போது விராட் கோலிக்கு நிகராக கருதப்பட்டார். இந்த சூழ்நிலையில் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இந்த இருவருமே தற்போது சில சறுக்கல்களை சந்தித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடரில் இந்த இருவரும் அபாரமாக மீண்டும் செயல்பட்டு தங்கள் அணியை மீண்டும் உயர்த்துவார்கள் என்று ரசிகர்களால் நம்பப்படுகிறது. இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்துர் ரவூப் விராட் கோலி மற்றும் பாபர் அசாமை விட நவீன கால கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா உலகின் சிறந்த கிரிக்கெட் வீரர் என அவர் கூறியிருக்கிறார். மேலும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இரண்டு அணிகளுமே சம நிலையில் இருக்கிறது என்பதால் வெற்றி பெறும் அணியை கணிப்பது கடினம் எனவும் சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
உலகின் சிறந்த பேட்ஸ்மேன் இவர்தான்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “விராட் கோலியை பொருத்தவரை அவருக்கு எந்த ஒரு ஒப்பிடும் இல்லை என்பது தான் முற்றிலுமான உண்மை. அவரது தரம் திறன் மற்றும் அழுத்தத்தின் கீழ் செயல்படும் அவரது திறன் ஆகியவை வேறுபடுத்துகின்றன. பாபர் அசாம் ஃபார்மில் இருக்கும் போது விதிவிலக்கானவர். ஆனால் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்த பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா என்று கூறுவேன். ரோஹித் சர்மா தற்போது உலக கிரிக்கெட்டில் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் என்று நான் நம்புகிறேன். அவர் விராட் கோலி மற்றும் பாபர் அசாமை விட மிகச் சிறந்தவர்.
இதையும் படிங்க:ஆர்சிபிக்கு சாதகமான இந்த விஷயம்.. அந்த ஒரே ஒரு டீம்னால பிரச்சனையா முடியும் – ஆகாஷ் சோப்ரா கணிப்பு
இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டியின் முடிவை ஒருபோதும் கணிக்க முடியாது. இந்த நேரத்தில் அணிகள் சமமாக பொருந்தி இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். இது எப்போதுமே அதிக அழுத்தத்திற்கு உள்ளான ஆட்டமாக இருக்கும். மேலும் இந்தியா மற்றும் உலகம் முழுவதிலும் இருக்கும் பாகிஸ்தான் ரசிகர்கள் மட்டுமே இந்த போட்டியில் முதலீடு செய்யவில்லை. இரண்டு அணிகளுமே பலமாக இருப்பதால் கணிப்பு சொல்வது கடினம்” என்று கூறியிருக்கிறார்.