பஞ்சாப் கிங்ஸ் ஸ்ரேயாஸ் ஐயருக்கு செஞ்ச இந்த விஷயம்.. ரொம்ப புத்துணர்ச்சியா இருந்துச்சு – ஏபி டிவில்லியர்ஸ் கருத்து

0
46

ஐபிஎல் 18வது சீசன் கிரிக்கெட் தொடர் மார்ச் மாதத்தில் இருந்து நடைபெற உள்ளது. இதில் ஒவ்வொரு ஐபிஎல் அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் எடுத்து அணிகளை வலுவாக கட்டமைத்தார்கள்.

இந்த சூழ்நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணி குறித்து தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

பஞ்சாப் அணிக்கு புதிய கேப்டன்

ஐபிஎல் அணிகளில் வெற்றிகரமான அணிகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இருக்கிறது. இதில் இரண்டு ஐபிஎல் அணிகளும் தலா ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்திருக்கின்றன. இதில் மற்றொரு வெற்றிகரமான அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கடந்த ஐபிஎல் தொடரில் மூன்றாவது முறையாக ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்தது. இந்த சூழ்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஏலத்தில் ஸ்ரேயாஸ் ஐயரை கேகேஆர் அணி கழட்டிவிட்டதால் அவரை பஞ்சாப் கிங்ஸ் லாவகமாக ஏலத்தில் எடுத்தது.

மேலும் சமீபத்தில் நடைபெற்ற ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வலுவான வீரர்களை எடுத்து தங்கள் அணியை கட்டமைத்ததோடு சமீபத்தில் நடைபெற்று வரும் பிக் பாஸ் தொடரில் வித்தியாசமான முறையில் ஸ்ரேயாஸ் ஐயரை பஞ்சாப் அணியின் கேப்டனாக அறிவித்தது. இது குறித்து தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்ட விதம் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

எனக்கு ரொம்ப புத்துணர்ச்சியா இருந்தது

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பஞ்சாப் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் மிகவும் வித்தியாசமான முறையில் நியமிக்கப்பட்டார். அது பார்ப்பதற்கு எனக்கு மிகவும் வேடிக்கையாக இருந்தது. ஒருவேளை இந்த முறையில் அறிவித்தது எனக்கு மிகவும் புதியதாக இருக்கலாம். பொதுவாக நான் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கும் முறையான அறிவிப்புக்கும் வெகுவாக பழகி விட்டேன். ஆனால் இது உண்மையில் மிகவும் புத்துணர்ச்சியூட்டும் வகையில் அமைந்தது.

இதையும் படிங்க:விராட் கோலி மாதிரியே அவர் ஆடல.. பார்முக்கு வர நான் சொல்ற எதையுமே செய்யல – ஆஸி பிரட்லீ பேட்டி

கேகேஆர் அணியில் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் இருந்தபோது நல்ல வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். அதில் மிக நம்ப முடியாத வகையில் இருந்தது நேர்மையாக சொல்ல வேண்டும். ஏன் என்றால் இது கேகேஆர் அணிக்கு ஒரு பெரிய இழப்பாகும். ஐபிஎல் தொடரை ஸ்ரேயாஸ் ஐயர் மிக சாமர்த்தியமாக கையாண்டார். அவருக்கு எதிராக பல ஐபிஎல் அணிகள் சிறப்பாக இருந்தன. ஆனால் கேகேஆர் யூனிட்டில் விஷயங்களை அமைதியாக வைத்திருக்க ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு புதிய வழியை கண்டுபிடித்து சிறப்பாக கையாண்டார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -