இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-3 என்ற கணக்கில் மோசமாக இழந்துது. இதில் இந்திய சீனியர் வீரர்களின் ஆட்டம் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்த நிலையில் பெரிய விமர்சனத்திற்கு உள்ளானது.
இந்த நிலையில் சீனியர் வீரரான விராட் கோலி இந்த தொடரில் விளையாடிய விதம் குறித்து ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் பிரட்லீ சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
விராட் கோலியின் மோசமான பேட்டிங் ஃபார்ம்
ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் விரைவாக ஆட்டம் இழந்த விராட் கோலி அதற்கு அடுத்த இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி சதம் அடித்து தனது இழந்த பேட்டிங் பார்மை மீட்டெடுத்தார். அதற்குப் பின்னர் விராட் கோலி அதற்கு அடுத்த போட்டிகளில் சிறப்பாக விளையாடி வெற்றி பெறுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அனைவரின் எதிர்பார்ப்பை பொய்யாக்கும் விதமாக அடுத்த 8 இன்னிங்ஸ்களில் விராட் கோலி ஆட்டம் மிக மோசமாக அமைந்தது.
அதிலும் குறிப்பாக குறைவான ரண்களில் ஆட்டம் இழந்து வெளியேறியது மட்டுமல்லாமல் தொடர்ச்சியாக ஒரே மாதிரியான முறையில் ஆட்டம் இழந்து வந்தார். அதாவது அவுட் சைட் ஆப் ஸ்டம்பின் வெளியே வீசப்படும் பந்துகளுக்கு விராட் கோலி தொடர்ச்சியாக ஆட்டம் இழந்து வந்தது பல முன்னாள் வீரர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் பிரட்லீ விராட் கோலி தொடர்ச்சியாக ஆட்டம் இழந்த விதம் குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
நான் பார்த்த விராட் கோலி இல்லை
இது குறித்து பிரட்லி கூறும் பொழுது ” விராட் கோலி ஆஸ்திரேலியா தொடரில் ஆட்டம் இழந்த விதம் உண்மையில் விராட் கோலி விளையாடுவது போல் இல்லை. ஒரு பேட்ஸ்மேன் அவ்வப்போது எதிர்பாராத விதமாக ஏமாறுவார்கள். இல்லையென்றால் மீண்டும் சிறப்பாக விளையாட ஏதாவது ஒன்றை செய்வார்கள். இல்லையெனில் தனது பேட்டிங் டெக்னிக்குகளில் சில மாற்றத்தை ஏற்படுத்துவார்கள். ஆனால் விராட் கோலியின் விஷயத்தில் அப்படி இல்லை.
இதையும் படிங்க:இந்திய அணி ஜெயிக்கணும்னா.. பிளேயர்ஸ்க்கு இதுதான் ஒரே வழி.. இதை செஞ்சே ஆகணும் – யுவராஜ் சிங் அறிவுரை
அந்த டெஸ்ட் தொடர் முழுவதுமே ஒரே மாதிரியாக ஆட்டம் இழந்து வெளியேறினார். ஆனால் பெர்த் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் விராட் கோலி 100 ரன்கள் எடுத்த விதத்தை நான் நினைத்துப் பார்க்கிறேன். முதல் இன்னிங்சில் சிறப்பாக விளையாடவில்லை என்றாலும் அதற்கு அடுத்த இன்னிங்சில் சிறப்பாக விளையாடி மீண்டும் தனது பழைய பேட்டிங் ஃபார்முக்கு திரும்பி விட்டார் என்று நினைத்தேன்” என கூறுகிறார்.