இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்த நிலையில் பல்வேறு எதிர்மறையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் இந்திய அணியின் தோல்வி குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
கம்பீர் கூறியதை வெளியிட்ட சர்பராஸ் கான்
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோசமாக விளையாடி தற்போது எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இதில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெற்ற இளம் வயது வீரர் சர்பராஸ் கான் ஐந்து போட்டிகளில் ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு பெறவில்லை. மேலும் இந்திய அணி தொடர் தோல்விகளை சந்தித்து வந்த நிலையில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ட்ரெஸ்ஸிங் ரூமில் கடுமையான கருத்துக்களை இந்திய வீரர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
கம்பீர் தெரிவித்த கருத்துக்களை சர்பராஸ் கான் பொதுவெளியில் சமூக வலைதளங்களில் தெரிவித்ததாக தற்போது முக்கிய பேசு பொருளாக மாறி உள்ளது. இந்த சூழ்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் சர்பராஸ் கான் செய்தது தவறு எனவும், பொதுவெளியில் இது போன்ற கருத்துக்களை பகிர்ந்து இருக்கக் கூடாது எனவும் சில முக்கிய கருத்துகளை பேசியிருக்கிறார்.
இதை செய்தது அவருடைய தவறு
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “கடந்த சில நாட்களில் என்ன நடந்திருந்தாலும் சரி, அது ஆஸ்திரேலியாவாக இருந்தாலும் யாராக இருந்தாலும் வெற்றி தோல்விகள் என்பது அனைவருக்கும் பொதுவானதாகவே இருக்கும். ஆனால் ஒவ்வொரு நாளும் புதிய கதைகள் ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்து வெளியே வரக்கூடாது. இன்று கௌதம் கம்பீர் கூறிய கருத்துக்களை சர்ப்ராஸ் கான் சமூக வலைதளங்களில் பகிர்ந்ததாக ஒரு செய்தி வெளியாகியது. சர்ப்ராஸ் கான் இதை செய்திருக்கக் கூடாது.
இதையும் படிங்க:பஞ்சாப் கிங்ஸ் ஸ்ரேயாஸ் ஐயருக்கு செஞ்ச இந்த விஷயம்.. ரொம்ப புத்துணர்ச்சியா இருந்துச்சு – ஏபி டிவில்லியர்ஸ் கருத்து
பொதுவெளியில் இதை செய்தது தவறு. எனவே கம்பீர் அவரிடம் இது குறித்து அங்கேயே பேசி இருக்கலாம். இளம் வீரராகிய அவருக்கு இது குறித்து புரிய வைத்திருக்கலாம். அவர் இந்தியாவுக்காக விளையாடும் எதிர்கால வீரராக இருக்கிறார். ஒரு மூத்த வீரராக இளைஞர்களுக்கு கம்பீர் புரிய வைக்க வேண்டும். உண்மையில் அந்த இளம் வீரர் செய்த தவறு. இதுபோன்று செய்திருக்கக் கூடாது. மேலும் கம்பீர் தற்போது இந்த பதவிக்கு புதியவர். அவருக்கு தேவையான கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.