ஸ்ரேயாஸ் ஐயர் இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக தலைமையேற்று அணியை வழிநடத்த இருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஸ்ரேயாஸ் ஐயர் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்புவதற்கான சாத்தியம் குறித்து சில முக்கிய கருத்துக்களை பேசியிருக்கிறார்.
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்ப முடியுமா?
ஸ்ரேயாஸ் ஐயரை பொருத்தவரை சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரின் மூலமாகவே இந்திய அணியில் இணைந்தார். அங்கு தனது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி அதற்குப் பிறகு சாம்பியன் டிராபி தொடரிலும் மிடில் வரிசையில் களம் இறங்கி அற்புதமாக விளையாடி இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார்.
இந்த சூழ்நிலையில் தற்போது நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக கேப்டனாகவும் பொறுப்பேற்று அணியை வழிநடத்த இருக்கிறார். மேலும் பேட்டிங் வரிசையில் மூன்றாவது வீரராக களம் இறங்க உள்ளதால் அதிக ரன்கள் எடுக்கவும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. எனவே ஐபிஎல் தொடரில் விளையாடுவதன் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஸ்ரேயாஸ் ஐயர் இடம் பிடிக்க முடியுமா? என்கிற கேள்விக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் தகுந்த விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அஸ்வினின் விளக்கம்
இது குறித்து அஸ்வின் விரிவாக கூறும்போது ” ஒரு விஷயம் எனக்கு சொல்லுங்கள், ஒரு நல்ல ஐபிஎல் போட்டி எப்படி டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்புவதில் வழிவகுக்கும். நீங்கள் ஒரு நாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடினால் உடனே யாராவது ஒருவர் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவதற்கான கட்டுரையை எழுதுவார். யாராவது டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடினால் டி20 போட்டிக்கு திரும்புவது குறித்து மக்கள் பேசுவார்கள். இதெல்லாம் தவறா? நீங்கள் டி20 போட்டியில் சிறப்பாக விளையாடினால் உங்கள் டி20 தகுதி மட்டுமே மேம்படும்.
இதையும் படிங்க:பாவம் மனுஷன்.. டிராவிட்டால நடக்கவே முடியல.. ஆனா இதை டீமுக்காக செய்யணும்னு உறுதியா இருக்கார் – பேட்டிங் கோச் பெருமிதம்
ஸ்ரேயாஸ் அய்யர் தற்போது மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார், சாம்பியன்ஸ் டிராபியில் அவர் காட்டிய ஃபார்ம் ஐபிஎல் தொடரிலும் வெளிப்பட்டால் நான் ஆச்சரியமடைய மாட்டேன். அவர் ஒரு அற்புதமான வீரர் கடந்த சீசனில் கேகேஆர் சாம்பியன் கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்கு வகித்தார்” என்று அஸ்வின் கூறி இருக்கிறார். அதாவது ஸ்ரேயாஸ் அய்யர் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டாலும் அவர் இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்புவதற்கு சரியாக இருக்காது என்று அஸ்வின் தனது விளக்கத்தை கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.