டி20 உலகக் கோப்பை 2024

பிட்ச் இப்படி இருந்தா தயவுசெய்து இவரை நம்பாதீங்க.. அதுக்கு 2 ஆல்ரவுண்டர்ஸ் இதை பண்ணலாம்- மஞ்ச்ரேக்கர் பேட்டி

ஒன்பதாவது உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் சாம்பியன் அணியை நிர்ணயிக்க போகும் இறுதிப் போட்டி இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இன்று நடைபெற இருக்கிறது.

- Advertisement -

பார்படாஸ் மைதானத்தில் போட்டி நடைபெறும் நிலையில் இந்த மைதானத்தின் சூழ்நிலைக்கு தகுந்தவாறு இந்திய அணிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக 2013ஆம் ஆண்டு மகேந்திர சிங் தோனி தலைமையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றது. அதற்குப் பிறகு பத்து வருடங்கள் கடந்த நிலையில் இந்திய அணி இன்னமும் ஒரு கோப்பையை கூட கைப்பற்ற முடியாத நிலையில் இருக்கிறது. கடந்த 2023ஆம் ஆண்டு உலக கோப்பையில் அற்புதமான வாய்ப்பாக இருந்த போதிலும் இறுதி போட்டியில் இந்திய அணி எதிர்பாராத தோல்வியை தழுவியது.

இதனால் மீண்டும் இந்திய அணிக்கு இந்த இறுதிப் போட்டியின் மூலம் ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. எனவே இந்த இறுதிப் போட்டியை வென்று இந்தியாவின் தாகத்தை தணிக்க வேண்டும் என்று பல முன்னாள் வீரர்கள் அதற்கு தகுந்த ஆலோசனைகளையும் கருத்துகளையும் கூறி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சஞ்சய் மஞ்சுரேக்கர் இறுதிப் போட்டி நடைபெறும் ஆடுகளம் குறித்து இந்திய அணிக்கு சில முக்கிய அறிவுரைகளை வழங்கியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து மஞ்சுரேக்கர் விரிவாக கூறும் பொழுது ” போட்டி நடைபெறும் பார்படாஸ் மைதானம் தட்டையாக பேட்டிங்க்கு சாதகமாக இருக்குமானால் ரவீந்திர ஜடேஜாவுக்கு நான்கு ஓவர்கள் கொடுப்பது கடினம் என்று நான் நினைக்கிறேன். அப்போது இந்திய அணி ஹர்திக் பாண்டியாவை நோக்கி திரும்புவது நல்லது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிராகவே இந்திய அணியின் சிறிது பலவீனத்தை பார்த்தோம். ஹர்திக் பாண்டியா நான்கு ஓவர்கள் பந்து வீசுகிறார். ஹர்ஸ்தீப் சிங்கினாலும் முடியும். ஆனால் தட்டையான ஆடுகளங்களில் வேகப்பந்து வீச்சு சற்று அழுத்தத்திற்கு உள்ளாகும்.

அதனால் அக்சார் பட்டேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரை பயன்படுத்தலாம்.ஆனால் இந்த ஆடுகளத்தில் ரவீந்திர ஜடேஜாவை மட்டும் நம்ப முடியாது. இந்த சமயத்தில் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் முன்னேற வேண்டும் மேலும் சிவம் தூபே ஒன்று அல்லது இரண்டு ஓவர்கள் வீச வேண்டி இருக்கும்” என்று மஞ்சுரேக்கர் கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க:2 அணிகளுமே ஸ்ட்ராங்தான்.. ஆனா இந்த ஒரு விஷயத்துனால இந்தியாவுக்குதான் இப்போ வாய்ப்பு அதிகம்- ஜாஹிர்கான் பேட்டி

சஞ்சய் மஞ்சுரேக்கருக்கும் ரவீந்திர ஜடேஜாவுக்கும் இடையேயான கருத்து மோதல் ஆரம்பத்தில் இருந்தே அனைவரும் அறிந்ததுதான். இருப்பினும் ரவீந்திர ஜடேஜா தற்போது பார்ம் இன்றி தவித்து வரும் நிலையில் மஞ்சுரேக்கர் இப்படி கூறியிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று தான் கூற வேண்டும்.

- Advertisement -
Published by

Recent Posts