உலக கிரிக்கெட்

இந்திய அணிக்கு என்ன பிரச்சனை.. ஏன் அவங்க தொடர்ந்து இதை செஞ்சிட்டே வராங்க – பாக் முன்னாள் வீரர் வேதனை

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இன்று நடைபெற உள்ள நிலையில், இதன் முதலாவது போட்டியாக நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாட உள்ளன.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முஸ்டாக் முகமது இந்திய அணி குறித்து சில முக்கியமான கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

சாம்பியன்ஸ் டிராபி தொடர்

இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சென்று சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட முடியாது என்று அறிவித்ததில் இருந்தே பல சர்ச்சைகள் உருவானது. பாகிஸ்தான் அணி மட்டும் இந்தியாவுக்குச் சென்று கிரிக்கெட் விளையாடுவதற்கு எந்த ஒரு ஆட்சேபனையும் தெரிவிக்காத நிலையில், இந்திய அணி மட்டும் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் விளையாடுவதற்கு ஏதேனும் சாக்குப் போக்கு கருத்துக்கள் சொல்லிக் கொண்டே வருகின்றன என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் தங்களை விமர்சனங்களை தெரிவித்திருந்தார்கள்.

இந்த சூழ்நிலையில் இருநாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் விளையாடக் கூடும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் முஸ்டாக் முகமது இந்திய அணி குறித்து சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். பிசிசிஐ ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறது எனவும் புரியவில்லை என்ற சில முக்கியமான கருத்துகளை பேசி இருக்கிறார்.

- Advertisement -

பிசிசிஐ குறித்து புரியவில்லை

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு விளையாட வந்திருக்க வேண்டும். ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் அவர்களை பாகிஸ்தானுக்கு வர விரும்பியது. அவர்களின் பிரச்சினை என்னவென்று எனக்கு புரியவில்லை. நாங்கள் கடந்த காலங்களில் சிறந்த ஹோஸ்ட்கள் என்பதை நிரூபித்துள்ளோம். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வருகை தரும் அணிகளை எப்போதும் சிறந்த முறையில் கவனித்துக் கொள்கிறார்கள். பாகிஸ்தான் எப்போதும் எந்த ஆட்சேபனையும் சொல்லாமல் இந்தியாவிற்கு கிரிக்கெட் விளையாட செல்கிறது.

இதையும் படிங்க:29 வருஷத்துக்கு பின் நல்ல விஷயம் நடக்குது.. நிறைய துன்பங்களை அனுபவித்து விட்டோம் – பாக் கேப்டன் உருக்கமான பேட்டி

ஆனால் இந்திய அணி மட்டும் பாகிஸ்தான் செல்வதற்கு முன்பாக ஏதேனும் சாக்குப் போக்கான கருத்துக்கள் சொல்லி விளையாட மறுக்கிறது. அவர்களின் அணுகுமுறை குறிப்பாக கிரிக்கெட் விளையாட்டுக்கும் பாகிஸ்தான் ரசிகர்களுக்கும் நல்லதல்ல. ஏனெனில் உலகின் சிறந்த வீரர்களாக இருக்கும் இந்திய வீரர்களை தங்கள் முன்னாள் பார்க்க முடியாத நிலை பாகிஸ்தான் ரசிகர்களுக்கு ஏற்படும். இந்திய அணிக்கு பாகிஸ்தானில் பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. ஆனால் இந்த நிகழ்வு அவர்களுக்கு வருத்தம் அளிக்கக்கூடிய விஷயமாகும்” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -
Published by