இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரை இந்திய அணி மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்த நிலையில் பார்டர் கவாஸ்கர் டிராஃபியை இழந்தது.
இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் கெர்ரி ஓகீப் ரோஹித் சர்மா குறித்து சில முக்கிய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
கடந்த ஜூலை மாதம் டி20 உலக கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்று கொடுத்த பிறகு அதற்கு பிறகு இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து இந்திய அணியின் தோல்வி ஆரம்பித்தது. இடையில் வங்கதேச அணிக்கு எதிராக மட்டும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகளில் தோல்வியும், அதற்குப் பிறகு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் பும்ரா தலைமையில் ஒரு போட்டி என வரிசையாக தொடர்களை இழந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது கேப்டனாக இருந்த ரகானே முன்னணி வீரர்கள் இல்லாத போதிலும், அணியில் மிஞ்சி இருந்த வீரர்களை மட்டுமே வைத்து சிறப்பாக செயல்பட்டு பார்டர் கவஸ்கர் டிராபியை வென்றார். இந்த நிலையில் ஆஸ்திரேலியா வீழ்த்திய கேப்டன்கள் பட்டியலில் தற்போது ரோகித் சர்மாவும் இணைந்து இருக்கிறார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஓகீப் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “இந்திய அணியால் இந்தத் தொடருக்கு ரகானேவை பெற முடியவில்லை. கடந்த முறை ரகானே ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்தார். ஆனால் சமீப காலமாக ஆஸ்திரேலியா அணி வீழ்த்திய கேப்டன்களை பார்த்தால் பாகிஸ்தான் அணியின் ஷான் மசூத் தலைமையில் மூன்று போட்டிகளை வென்றுள்ளது. அதற்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிராத் வைட் தலைமையில் ஒரு போட்டி, அதற்குப் பின்னர் நியூசிலாந்துக்கு சென்று டிம் சவுதி தலைமையில் இரண்டு போட்டிகளை வென்ற நிலையில் தற்போது அந்த பட்டியலில் ரோகித் சர்மாவும் இணைந்துள்ளார்.
இதையும் படிங்க:டிராவிட் இருக்கும் வரை சரியாக இருந்தது.. சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிங்க – ஹர்பஜன் சிங் விமர்சனம்
அவர்களால் பும்ராவை வீழ்த்த முடியவில்லை. அவர் மிகவும் நன்றாக செயல்பட்டார் அதற்கு பதிலாக ரோகித் சர்மாவுக்கு தகுந்த தடியடி கொடுக்கப்பட்டது. அவர்கள் ரோகித் சர்மாவை நேராக வீழ்த்தினார்கள், இந்த நிலையில் அவர் இறுதிப் போட்டியில் இருந்து விலகினார். இதில் ஆஸ்திரேலியா வீரர்கள் பயன்படுத்தும் தந்திரம் என்னவென்றால் ஒரு கேப்டனை உடைத்து வெற்றி பெற்றால் அவர்களுக்கு வெற்றி பெறக்கூடிய அது முழு அதிகாரத்தை தருகிறது” என்று கூறி இருக்கிறார்.