பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஜாகிர் அப்பாஸ் விராட் கோலி உடன் பாபர் அசாமை ஒப்பீடு செய்வது அர்த்தமற்ற ஒன்று என்று விமர்சனம் செய்திருக்கிறார்.
கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் கிரிக்கெட் உலகின் கிங் என்று அழைக்கப்படும் விராட் கோலி உடன் பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன் பாபர் அசாமை ஒப்பிடுவது வழக்கமாக இருந்து வந்தது. இப்படியான நிலையில் பாகிஸ்தான் தரப்பில் இருந்தே விராட் கோலி உடன் பாபர் அசாமை ஒப்பிட கூடாது என குரல்கள் என ஆரம்பித்திருக்கிறது.
பாபர் அசாம் ஆறுதலும் சரிவும்
விராட் கோலி பேட்டிங் ஃபார்ம் சரிந்திருந்த காலகட்டத்தில் அவருக்கு ஆறுதல்படுத்தும் வகையில் ட்விட்டரில் பாபர் அசாம் கருத்து தெரிவித்திருந்தார். அடுத்த சில வாரங்களில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 போட்டியில் ஆசிய கோப்பையில் விராட் கோலி சதம் அடித்து திரும்பி வந்தார்.
அந்த இடத்தில் இருந்தே பாபர் அசாம் பேட்டிங் கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து தற்பொழுது அவரை அணிக்கு வெளியில் வைக்க வேண்டும் என்கின்ற அளவுக்கு பேச்சுகள் எழ ஆரம்பித்திருக்கிறது. தற்போது விராட் கோலி சிறப்பாக இருக்கிறார் எனவே அவருடன் பாபர் அசாமை ஒப்பிடாதீர்கள் என பாகிஸ்தான் முன்னாள் வீரர்களே பேசும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது.
விராட் கோலி ஒவ்வொரு போட்டியும் சதம் அடிப்பார்
இதுகுறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஜாகிர் அப்பாஸ் கூறும் பொழுது “இருவரையும் ஒப்பீடு செய்வது அர்த்தமற்றவை. விராட் கோலி ஒவ்வொரு போட்டியிலும் ஸ்கோர் செய்கிறார் ஆனால் பாபர் ஒவ்வொரு போட்டியிலும் ஸ்கோர் செய்வது கிடையாது. எந்தப் போட்டியிலும் கோல் அடிக்காத ஒரு வீரருடன் எப்படி ஒப்பீடு செய்வீர்கள்? பாபர் இனி ரன்கள் எடுக்கவில்லை என்றால் அவர் பார்மில் இல்லை என்றால் அணிக்கு வெளியில் இருக்க வேண்டும்”
இதையும் படிங்க : பும்ரா யாருன்னு அவருக்கு நல்லா தெரியும்.. அதனால இந்த விஷயத்துக்கெல்லாம் அவரு வருத்தப்பட மாட்டாரு – ஆர்பி சிங் பேட்டி
“ஒட்டுமொத்தமாக இந்திய அணி மிகச் சிறப்பாக இருக்கிறது அவர்களுடைய பேட்ஸ்மேன்ஸ் மற்றும் பவுலர்ஸ் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். இந்தியா மிகவும் சமநிலை கொண்ட அணியாக இருக்கிறது. எல்லாமே உங்களுக்கு சுமுகமாக இருக்கும் பொழுது சாதகமாக நடக்கும். தற்போது இந்திய அணிக்கு அப்படித்தான் நடக்கிறது” என்று கூறியிருக்கிறார்.