இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மூன்று நாட்களில் மழையின் தாக்கம் இருந்தாலும் இந்திய அணி அடுத்த இரண்டு நாட்களில் மிகக் கச்சிதமாக செயல்பட்டு வெற்றி பெற்று இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஆர்பி சிங் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வங்கதேச கிரிக்கெட் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிய நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் போட்டியில் பும்ரா ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். அதுமட்டுமில்லாமல் வெற்றி பெற வேண்டிய இரண்டாவது போட்டியிலும் முதல் இன்னிங்சில் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்திய பம்ரா இரண்டாவது இன்னிங்ஸிலும் மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றி வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.
இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக செயல்பட்ட நிலையில் பும்ராவிற்கு ஆட்டநாயகன் விருதோ அல்லது தொடர் நாயகன் விருதோ எதுவும் வழங்கப்படவில்லை. இருப்பினும் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றுவதை தவிர இதுகுறித்து பும்ரா வருத்தப்பட மாட்டார் என்று இந்தியாவின் முன்னாள் வேத பந்துவீச்சாளர் ஆர்பி சிங் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “அவர் மனதில் இது குறித்து எந்த எண்ணமும் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஏனென்றால் அவர் எப்படிப்பட்ட வீரர், அவர் ஏற்படுத்திய தாக்கம், அவர் மதிப்பு என்ன என்று அவருக்கு நன்றாக தெரியும். அவர் இல்லாமல்எந்த கேப்டனும் குறிப்பாக இப்படி ஒரு சூழ்நிலையில் வெற்றி பெறுவது என்பது மிகவும் கடினம். பும்ரா இல்லாவிட்டால் இந்தப் போட்டி நிச்சயமாக நீண்ட நேரம் சென்றிருக்கும்.
15 முதல் 20 ஆண்டுகளுக்கு பிறகு நாம் பார்த்தால் அவரது எண்ணிக்கை பெரிதாக இருக்காது, ஆனால் அவர் இந்த நூற்றாண்டில் சிறந்த வேகப் பந்துவீச்சாளராக நான் கருதுகிறேன். அவரை எந்த நிலையிலும், எந்த வடிவத்திலும் எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் பந்து வீசச் செய்தால், அவர் தனது கேப்டனுக்காக சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டை எடுத்துக் கொடுப்பார். இந்த விஷயத்தில் அவர் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறார்” என்று ஆர்பி சிங் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:நான் இன்னும் எவ்வளவு நாள்.. கிரிக்கெட் ஆடுவேன்னு தெரியல.. ஆனா இருக்கிற வரைக்கும் இத செஞ்சுட்டே இருப்பேன் – அஸ்வின் பேட்டி
அதாவது அஸ்வின், முரளிதரன், கும்ப்ளே போன்று அதிக விக்கெட் வீழ்த்தாவிட்டாலும் அவர் அணி வெற்றி பெறுவதற்கு எல்லா சூழ்நிலையிலும் திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுப்பார் என்று ஆர் பி சிங் கூறி இருக்கிறார்.