கம்பீர் குறுக்கு வழியில் கோச் ஆகிட்டார்.. ஆனா இவர்தான் வந்திருக்கனும் – பாக் தன்வீர் அஹ்மத் குற்றச்சாட்டு

0
9774
Gambhir

நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடருடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து கௌதம் கம்பீர் புதிய தலைமை பயிற்சியாளராக கொண்டுவரப்பட்டது ஒரு தலைப்பட்சமானது என பாகிஸ்தான் முன்னாள் வீரர் தன்வீர் அஹமத் குற்றம் சாட்டி இருக்கிறார்.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி இருந்த பொழுது ராகுல் டிராவிட் முதன் முதலில் இரண்டாவது பயிற்சியாளராக இளம் இந்திய அணியுடன் இலங்கைக்கு சுற்றுப்பயணம் சென்றார். பிறகு ரவி சாஸ்திரி பதவிக்காலம் முடிவடைய ராகுல் டிராவிட் 2021 ஆம் ஆண்டு முழு நேர இந்திய அணியின் பயிற்சியாளராக வந்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து ராகுல் டிராவிட் ஓய்வெடுக்கும் பொழுது அல்லது இளம் இந்திய அணி சிறிய நாடுகளுக்கு எதிராக விளையாடும் பொழுது அந்த அணிக்கு விவிஎஸ் லக்ஷ்மணன் பயிற்சியாளராக சென்று வழி நடத்தி வந்தார்.

இவர் ஹர்திக் பாண்டியா முதல் தற்பொழுது சுப்மன் கில் வரையில் கேப்டனாக சிறிய நாடுகளுக்கு எதிராக மோதிய பொழுது அந்த இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்து வந்திருக்கிறார். மேலும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராகவும் இருந்து வருகிறார்.

- Advertisement -

எனவே ராகுல் டிராவிட் பதவிக்காலம் முடிவடைந்ததும் விவிஎஸ் லக்ஷ்மணனுக்கு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா அணியின் மென்டர் கவுதம் கம்பீர் அந்த பொறுப்புக்கு கொண்டுவரப்பட்டார்.

இதையும் படிங்க : 2018 டிராவிட் அப்படி சொல்லுவார்னு நினைக்கவே இல்லை.. இன்னொரு முகம் இருக்கு – அபிஷேக் ஷர்மா பேட்டி

இது குறித்து பாகிஸ்தான் அணியின் தன்வீர் அகமது கூறும் பொழுது “இந்திய பி அணியுடன் நீண்ட காலம் பயிற்சியாளராக இருந்த காரணத்தினால் விவிஎஸ் லக்ஷ்மணன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும். மெரிட்டின் அடிப்படையில் இந்திய தலைமை பயிற்சியாளர் பதவி நிரப்பப்படவில்லை. கவுதம் கம்பீர் தகுதியின் அடிப்படையில் வராமல் சிபாரிசின் அடிப்படையில் வந்திருக்கிறார்” என்று குற்றம் சாட்டி இருக்கிறார்.

- Advertisement -