2018 டிராவிட் அப்படி சொல்லுவார்னு நினைக்கவே இல்லை.. இன்னொரு முகம் இருக்கு – அபிஷேக் ஷர்மா பேட்டி

0
287
Abhishek

இந்திய டி20 கிரிக்கெட்டில் தற்போது ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்க்கும் இளம் துவக்க ஆட்டக்காரராக அபிஷேக் சர்மா கவனம் பெற்று இருக்கிறார். இந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் அண்டர் 19 உலகக்கோப்பை விளையாடியது குறித்து அபிஷேக் ஷர்மா முக்கியமான விஷயம் ஒன்றை கூறி இருக்கிறார்.

அபிஷேக் ஷர்மா இந்திய அணியில் வாய்ப்பு பெற்று உள்ளே வந்த பொழுது சரியாக ராகுல் டிராவிட் தனது பதவிக்காலம் முடிந்து இந்திய அணியில் இருந்து வெளியேறி இருந்தார். ஆனால் ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் இளையோர் அணியில் விளையாடிய அனுபவம் அபிஷேக் ஷர்மாவுக்கு கிடைத்திருக்கிறது.

- Advertisement -

ராகுல் டிராவிட் 2015 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையில் இந்திய ஏ அணி மற்றும் அண்டர் 19 இந்திய அணி என இரண்டுக்கும் தலைமை பயிற்சியாளராக இருந்து வந்தார். இந்த காலகட்டத்தில் அவரிடமிருந்து நிறைய இளம் வீரர்கள் உருவாகி வந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரது பயிற்சியின் கீழ் விளையாடியதும், மேலும் ஆரம்ப நாட்களில் இருந்து சுப்மன் கில் உடன் இருக்கும் நட்பு குறித்தும் அபிஷேக் ஷர்மா பேசியிருக்கிறார்.

இது குறித்து அபிஷேக் ஷர்மா கூறும் பொழுது “நாங்கள் அண்டர் 19 ஆசிய கோப்பை தொடரில் பங்களாதேஷ் அணியிடம் தோற்றோம். அப்போது அவர்கள் எங்களிடம் எல்லை மீறி நடந்து கொண்டார்கள். திரும்பி நாங்கள் அவர்களை 2018 ஆம் ஆண்டு அண்டர் 19 உலகக் கோப்பையில் எதிர்கொண்டோம். அப்போது பங்களாதேஷ் வீரர்கள் ஏதாவது தவறாக நடந்து கொண்டால், நாங்கள் அதற்கு சரியான பதிலடி களத்தில் திருப்பிக் கொடுக்க வேண்டும் என ராகுல் டிராவிட் கூறினார்.

- Advertisement -

ராகுல் டிராவிட் அவர்கள் எங்களிடம் இப்படி களத்தில் பதிலடி கொடுக்க சொல்வார் என்று நாங்கள் யாருமே எதிர்பார்க்கக் கிடையாது. ராகுல் டிராவிட் அவர்கள் கூறிய அந்த வார்த்தைகள் எங்களுக்கு அந்த போட்டியை எதிர்கொள்வதற்கான முக்கிய உத்வேகமாக மாறியது

இதையும் படிங்க : இந்தியாவுடன் சேர்ந்து ஆப்கானும் பாகிஸ்தானில் விளையாட மறுக்கிறதா?.. ஐசிசி கூட்டத்தில் எடுத்த முடிவு.. வெளியான உறுதி தகவல்

நானும் கில்லும் சிறுவயதில் இருந்து ஒன்றாக விளையாடி வளர்ந்தவர்கள். விளையாடும் காலத்தில் நாங்கள் இருவரும் ஒரே அறையில் தங்கியவர்கள். எங்களுக்கு இடையேயான பந்தம் இன்னும் அப்படியே இருக்கிறது. ஒரு பக்கத்தில் அவர் பிஸி ஆகிவிட்டார். நானும் என்னுடைய அணிகளுக்கு விளையாடுவதில் பிஸியாக இருந்தேன். எங்களால் நிறைய பேசிக் கொள்ள முடிவதில்லை. ஆனால் நாங்கள் எப்பொழுது சந்தித்துக் கொண்டாலும் பழைய படியே மீண்டும் பேச ஆரம்பிப்போம். எங்களுக்குள் அந்த நட்பு இன்னும் அப்படியே இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -