கண்ணால பார்த்தேன்.. பாகிஸ்தான் ஒட்டு மொத்த கிரிக்கெட்டுக்கும் ஒரு விஷயம் தெரியாது – சோயப் மாலிக் வருத்தம்

0
216
Malik

தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி முதல் சுற்றுடன் வெளியேறி இருக்கிறது. ஏற்கனவே ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரிலும் அரை இறுதிக்கு தகுதி பெற முடியவில்லை. இதற்கான காரணங்கள் குறித்து மிக ஆழமாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக் பேசியிருக்கிறார்.

நேற்று அயர்லாந்து மற்றும் அமெரிக்க அணிகள் ஃப்ளோரிடா மாகாண மைதானத்தில் விளையாட இருந்தன. அந்தத் தொடர்ந்து மழை பெய்து வருகின்ற காரணத்தினால் ஒரு பந்து கூட வீசப்படாமல் போட்டி ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக அமெரிக்க அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற பாகிஸ்தான் பரிதாபமாக வெளியேறியது.

- Advertisement -

பாகிஸ்தானின் இந்த தோல்வி குறித்து பேசி இருக்கும் சோயப் மாலிக் “நான் இப்போதும் பாகிஸ்தான் கிரிக்கெட் உடன் தொடர்பில் இருந்து வருகிறேன். நான் உள்நாட்டு கிரிக்கெட்டில் டி20 வடிவத்தில் சியால்கோட் அணிக்கு விளையாடுகிறேன். இது பிஎஸ்எல் தொடருக்கு அடுத்து உள்நாட்டில் பெரிய டி20 தொடர். ஆனால் அங்கு யாருக்குமே ஆட்ட விழிப்புணர்வு சுத்தமாக கிடையாது.

மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் விருப்பு வெறுப்பு கலாச்சாரத்தில் இருந்து வெளியில் வர முடியாது. இது பல ஆண்டுகளாக வளர்ந்து வருகிறது. ஆனால் தகுதி உள்ள வீரர்களுக்கு வாய்ப்புகள் கொடுப்பது பற்றியாரும் பேசுவதில்லை. இதனால் அந்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. உங்களுக்கு குறைந்தபட்சம் விளையாட்டு விழிப்புணர்வு இருக்க வேண்டும். நான் இது குறித்து பரிதாபமாக உணர்கிறேன்.

அசோசியேட் அணிகளுக்கு எதிராக வெற்றி அல்லது தோல்வி என்பதெல்லாம் இரண்டாவது பட்சம்தான். ஆனால் விளையாட்டை விளையாடுவதில் நீங்கள் டாமினேட் செய்ய வேண்டும்.ஆனால் பாகிஸ்தானில் உள்நாட்டு கிரிக்கெட்டிலும் ஆட்ட விழிப்புணர்வை வீரர்களிடம் பார்க்க முடிவதில்லை. இது அப்படியே பாகிஸ்தான் கிரிக்கெட்டிலும் எதிரொலிக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : ஆஸ்திரேலியா நேர்மையா விளையாடும்.. நான் அவங்கள சப்போர்ட் பண்றன் – இங்கிலாந்து மார்க் வுட் பேச்சு

போட்டி நெருக்கடியான நிலைக்குச் செல்லும் பொழுது ஆட்ட விழிப்புணர்வை யாரிடமும் பார்க்க முடிவதில்லை. குறைந்தபட்சம் நீங்கள் போட்டியில் ஏற்படும் தடையை எவ்வாறு கடப்பது என்று தெரிந்திருக்க வேண்டும். இங்கே வீரர்களுக்கு இந்த செயல்முறை கூட தெரியாது” என்று வருத்தமாகக் கூறியிருக்கிறார்.