நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் அடுத்த சுற்றுக்கு இங்கிலாந்து அணி முன்னேற ஆஸ்திரேலியா அணியை நம்பி இருக்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி நேர்மையாக விளையாடும் என்றும், அந்த அணியை தான் ஆதரிப்பதாகவும் இங்கிலாந்து வீரர் மார்க் வுட் பேசியிருக்கிறார்.
தற்போது ஆஸ்திரேலியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதிக் கொள்ளும் நாளைய போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற வேண்டும். மேலும் இன்று இரவு இங்கிலாந்து அணி நமீபியா அணிக்கு எதிராக வெற்றி பெற வேண்டும். இது நடக்கும் பட்சத்தில் இங்கிலாந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஆஸ்திரேலிய வீரர் ஹேஸில்வுட் இங்கிலாந்து அணி முதல் சுற்றில் வெளியேறுவது நல்லது என்பதாக பேசி இருந்தார். மேலும் ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக தட்டி விளையாடி கடைசியில் வெற்றி பெற்றால் கூட இங்கிலாந்து வெளியேறிவிடும் என்பதாகவும் கூறியிருந்தார்.
இவரது இந்த பேச்சு வெளியில் நிறைய சர்ச்சையாக மாறியது. இதற்குப் பிறகு இந்த விஷயம் குறித்து விளக்கம் அளித்த பாட் கம்மின்ஸ் இது ஜோக்காக கூறிய விஷயம் இதை சீரியஸாக எடுக்க தேவையில்லை என்று பேசி இருந்தார். மேலும் ஆஸ்திரேலியா அணி கிரிக்கெட் உத்வேகத்துக்கு விரோதமாக விளையாடாது என்றும் கூறியிருந்தார்.
இதைத்தொடர்ந்து இதுகுறித்து பேசி இருக்கும் இங்கிலாந்து வீரர் மார்க் வுட் “சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது என்றும், நாங்கள் பெரிய மற்றும் அச்சுறுத்தல் என்றும் ஹேஸில் வுட் கூறுகிறார். நான் உண்மையில் அதை மிகவும் பெருமையாகவே எங்களைக் குறித்து பார்த்தேன். இதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆஸ்திரேலியா ஸ்காட்லாந்து போட்டியில் நாங்கள் ஆஸ்திரேலியாவை ஆதரிப்போம்.
இதையும் படிங்க : 5 ஓவரில் நியூசிலாந்து ஆறுதல் வெற்றி.. 10 பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறிய பரிதாபம்
நாங்கள் நன்றாக முதலில் விளையாட வேண்டும். அடுத்து ஆஸ்திரேலியா போட்டியை வெல்ல வேண்டும். நீங்கள் அடுத்த கட்டத்திற்கு செல்லும் பொழுது அங்கு எந்த ஒரு அணியும் தாண்டி செல்லலாம். ஆஸ்திரேலியா அணி கடினமாக விளையாடும் என்று நான் நம்புகிறேன். அவர்கள் ஆஸ்திரேலியா வழியில் கடினமாகவும் நேர்மையாகவும் விளையாடி வெற்றி பெற முயற்சிப்பார்கள்” என்று கூறியிருக்கிறார்.