இந்திய கிரிக்கெட்

ஷிவம் துபே எதுக்கு?.. அந்த 33 வயசு வீரரை கொண்டு வாங்க.. ஆள் வேற செம ஃபிட் – பாக் சல்மான் பட் அட்வைஸ்

நேற்று இந்திய அணி இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இந்த நிலையில் மிக மோசமான முறையில் ஆட்டம் இழந்த சிவம் துபே குறித்து பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சல்மான் பட் விமர்சனம் செய்திருக்கிறார்.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 240 ரன்கள் எடுத்தது. குறிப்பிட்ட அந்த ஆடுகளத்திற்கு இது சரியான ரன்கள் என்றாலும் கூட, இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதல் விக்கெட்டுக்கு கில் உடன் சேர்ந்து அதிரடியாக 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொடுத்தார். இந்த இடத்தில் இருந்து போட்டியை இந்திய அணி தோற்றதுதான் விமர்சனம் ஆகி வருகிறது.

குறிப்பாக சிவம் துபேவை நான்காவது இடத்தில் ரைட் லெப்ட் காம்பினேஷன் வேண்டும் என்பதற்காக அனுப்பினார்கள். உள்ளே வந்த சிவம் துபே வழக்கமான ஒரு லெக் ஸ்பின் பந்தை கணிக்காமல் எல்பிடபிள்யு முறையில் மோசமாக ஆட்டம் இழந்தார். இதனால் அவரை ஒருநாள் தொடருக்கு தேர்வு செய்தது மிக மோசமானது என பலரும் விமர்சிக்க அதையே சல்மான் பட்டும் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து சல்மான் பட் பேசும் பொழுது “சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் இந்தியா தங்களது வியூகங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். ஏனென்றால் அவர்கள் சிவம் துபே இடத்தில் சூரியகுமார் யாதவை தேர்வு செய்யலாம். சூரியகுமார் யாதவை விட சிவம் துபே சிறப்பான வீரர் என்று நான் நினைக்கவில்லை. அவர் அணிக்கு வந்தார். என்று எனக்கு தெரியும் ஆனால் அவருடைய புள்ளிவிபரங்கள் எனக்கு தெரியாது.

- Advertisement -

சூரிய குமாருக்கு பெரிய புள்ளி விபரங்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் இல்லை என்றாலும் கூட அவர் பேட்டிங் செய்யும் விதத்திற்கு அவர் ஒருநாள் கிரிக்கெட் அணியில் இருந்திருக்க வேண்டும்.மேலும் அவர் நல்ல பார்மில் இருந்தார், இலங்கையில் ரண்களும் எடுத்திருந்தார். அவருடைய கேப்டன் கிரிக்கெட் வாழ்க்கையும் சிறப்பாகவே ஆரம்பித்து இருந்தது.மேலும் அவர் நல்ல ஃபீல்டரும் கூட.

இதையும் படிங்க : கம்பீர் இப்பவும் அப்பாவிதான்.. ஆனா நிச்சயம் டிராவிட் ரவி சாஸ்திரி மாதிரி கிடையாது – இளம் வயது பயிற்சியாளர் பேட்டி

அதே சமயத்தில் சிவம் துபே ஃபீல்டிங்கில் மிகவும் தாமதமானவர் மற்றும் சுறுசுறுப்பானவர் கிடையாது. பேட்டிங்கை பொறுத்தவரை இந்தியாவிற்கு புத்திசாலித்தனமான முடிவுகள் எடுக்க வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால் சிவம் துபே எப்போதாவது 40 அல்லது 50 ரன்கள் எடுக்க கூடியவர் ஆனால் அவர் தொடர்ந்து சீராக விளையாடக் கூடியவர் கிடையாது. மேலும் இதை எல்லோருமே பார்க்க செய்து இருக்கிறார்கள். இத்தோடு அவர் சூரியகுமார் போல ஃபிட்டானவரும் கிடையாது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts