இந்திய அணி இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியை தோற்றதும் புதிய பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மீது மிகக் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. இந்த நிலையில் அவருடைய இளம் வயது பயிற்சியாளர் சஞ்சய் பரத்வாஜ் கம்பீர் இப்பொழுதும் கூட ஒரு அப்பாவி தான் என்று கூறியிருக்கிறார்.
ராகுல் டிராவிட் பதவிக்காலம் முடிந்த பிறகு இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவு
தம் கம்பீர் பொறுப்பேற்றார். இதைத்தொடர்ந்து இலங்கை அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை சூரியகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி கைப்பற்றியது.
இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கம்பீர் பயிற்சியாளர் வாழ்க்கை வெற்றிகரமாக ஆரம்பித்தது. இந்த நிலையில்தான் இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி டையில் முடிந்தது. மேலும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக இந்திய அணி தோல்வி அடைந்தது.
இந்த போட்டியில் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் வீரர்களின் பேட்டிங் ஆர்டரை மாற்றியது மற்றும் வீரர்களை தேர்வு செய்ததில் தவறு செய்து விட்டதாக அவர் மீது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள். இப்படியான நிலையில் கம்பீர் எப்படியானவர் என்பது குறித்து அவரது இளம் வயது பயிற்சியாளர் கூறியிருக்கிறார்.
இது குறித்து சஞ்சய் பரத்வாஜ் பேசும்பொழுது “இப்பொழுதும் கூட அவர் ஒரு அப்பாவி குழந்தை போலவே இருக்கிறார். அவர் கெட்ட மனிதர் கிடையாது. அவரைத் திமிர் பிடித்தவர் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் அது வெற்றி பெறுவதற்கான அவருடைய அணுகுமுறை. நான் மேட்ச் விளையாட வைத்த பொழுது தோல்வி அடைந்தால் அவர் எப்பொழுதும் அழுவார். அவருக்கு அப்போது இருந்து இப்போது வரையில் தோல்வி பிடிப்பதே கிடையாது. அவரைப் போன்ற வெளிப்படையான ஆளுமை கொண்டவர்கள் தீவிரமாகத் தான் இருப்பார்கள்.
இதையும் படிங்க : இந்திய அணியில் அந்த 3 இளம் வீரர்களுக்கு சமயம் வந்துடுச்சு.. ராகுல் ஸ்ரேயாஸ் பயிற்சியே செய்யல – பசித் அலி விமர்சனம்
கம்பீர் எப்பொழுதும் தொழில்நுட்ப ரீதியான அம்சங்களை பயிற்சியில் வைத்திருக்க மாட்டார். ஏனென்றால் வீரர்கள் தொழில்நுட்ப ரீதியாக சிறந்தவர்களாக இருப்பதால்தான் அவர்கள் இந்திய அணியில் இருக்கிறார்கள் என்று அவருக்கு தெரியும். கம்பீர் திட்டங்கள் வகுப்பதில் வித்தியாசமானவராக இருப்பார்.மேலும் தன் குறித்து உறுதியான நம்பிக்கை இல்லாத வீரர்களுக்கு அவர் தன்னம்பிக்கையும் தைரியமும் கொடுத்து மேலே கொண்டு வருவார்” என்று கூறியிருக்கிறார்






