தற்போது உலக கிரிக்கெட்டில் மிகப்பெரிய ஆதிக்க சக்தியாக இந்தியா மாறி இருக்கிறது. இதற்கு காரணம் இந்தியா மிகப்பெரிய வருமானத்தை கிரிக்கெட்டில் உருவாக்குகிறது. அதே சமயத்தில் இந்தியா மட்டுமே உலக கிரிக்கெட்டில் சிறந்த வீரர்களோடு வளர்ந்து வரும் ஒரே அணியாக இருக்கிறது என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் கூறியிருக்கிறார்.
கடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியில் உடல் பகுதியில் பின்னடைவில் இருந்த அசாம் கான் விளையாடும் அணியில் இருந்தார். அதே சமயத்தில் சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் இருவர் நான்கு பிரதான வேகப்பந்துவீச்சாளர்கள் இருந்தபோதிலும் அணியில் இருந்தார்கள். கூடுதல் பேட்ஸ்மேன் கொண்டு விளையாடுவதற்கு அணியில் சரியான பேட்ஸ்மேன் இல்லை. இப்படியான நிலையில் தான் இந்திய கிரிக்கெட் எப்படி தரமான வீரர்களை உருவாக்குகிறது என சல்மான் பட் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து சல்மான் பட் பேசும்பொழுது “தற்போது இலங்கை தொடரில் அபிஷேக் ஷர்மா மற்றும் ருதுராஜ் இருவரும் இல்லை. மேலும் இந்த அணியில் சஞ்சு சாம்சனுக்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அத்தோடு பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதுதான் இந்திய கிரிக்கெட்டின் ஆழம். தற்போது அவர்களிடம் உலக தரத்திற்கு இரண்டு மூன்று அணிகள் இருக்கலாம். ஏனென்றால் அவர்களின் கிரிக்கெட் பாதை மிகவும் வலுவாக இருக்கிறது.
இதேபோல் இந்திய ஏ அணி விளையாடும் போட்டி அட்டவணை மிகப்பெரியது. அனைவரும் விளையாடும்படி அவர்களுடைய உள்நாட்டு கிரிக்கெட் அட்டவணை உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனால் இந்தியாவில் தரமான வீரர்கள் உருவாக்கப்படுகிறார்கள். மேலும் அவர்கள் இரண்டு மூன்று சிறந்த அணிகளை உருவாக்கி விட்டார்கள். இத்தோடு உலகிலேயே ஒரே ஒரு டி20 லீக் தொடரில் மட்டுமே விளையாடும் அணியாக இந்தியா மட்டும்தான் இருக்கிறது. அவர்கள் ஐபிஎல் தொடரில் மட்டும்தான் விளையாடுகிறார்கள்.
இந்தியாவிற்கு எப்படி வீரர்கள் வருகிறார்கள் என்பது உங்களுக்கு புரியவில்லை என்றால் இதை உங்களுக்கு கடவுள் மட்டுமே விளக்க முடியும். இது ஒரு தனி நபரின் திறன் சார்ந்தது கிடையாது.இந்தியா கிரிக்கெட்டில் எப்படி பெரிய நாடாக உருவாகி இருக்கிறது என்பது உங்கள் முன்னால் இருக்கிறது. ஆஸ்திரேலியா கூட இந்தியாவிற்கு பக்கத்தில் கிடையாது.
இதையும் படிங்க : ஒலிம்பிக் 2024.. இந்திய அணிக்கு முதல் பதக்கம்.. 12 வருட காத்திருப்பு.. யார் இந்த மனு பாக்கர்.?
ஆஸ்திரேலியா கூட முன்பு போல சிறப்பாக இல்லை. உலகின் பெயர் அணிகளும் இப்படி சிறப்பாக இல்லை. இந்தியா மட்டுமே கிரிக்கெட்டில் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. மற்ற அணிகள் எல்லாமே சரிவை சந்தித்திருக்கின்றன. சில அணிகள் வேகமாக சரிவை சந்திக்கின்றன. சில அணிகள் கொஞ்சம் நிலையாக தெரிகின்றன அவ்வளவுதான்” என்று கூறி இருக்கிறார்.






