10 விக்கெட்.. 24 பந்தில் ஓபனராக பென் ஸ்டோக்ஸ் தனி சாதனை.. வெஸ்ட் இண்டீசை ஒயிட் வாஸ்.. இங்கிலாந்து அபார வெற்றி

0
399
England

வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்றது. இன்று மூன்றாவது நாள் முடிவுக்கு முன்பாகவே இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, டெஸ்ட் தொடரில் ஒயிட் வாஷ் செய்திருக்கிறது.

இந்த போட்டிக்கான டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கிரேக் பிராத்வெயிட் 61, ஜேசன் ஹோல்டர் 59 ரன்கள் எடுத்தார்கள். வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 282 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் கஸ் அட்கின்சன் நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய இங்கிலாந்து அணிக்கு விக்கெட் கீப்பர் ஜெமி ஸ்மித் 95 ரன்கள், ஜோ ரூட் 87 ரன்கள் எடுத்தார்கள். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 375 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் அல்ஜாரி ஜோசப் 4 விக்கெட் கைப்பற்றினார்.

இதைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் மூன்றாவது நாளில் 175 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு மைக் லூயிஸ் 57, கவேம் ஹாட்ஜ் 55 ரன்கள் எடுத்தார்கள்.இங்கிலாந்து தரப்பில் மார்க் விட்டு 14 ஓவர்கள் பந்துவீசி 40 ரன்கள் மட்டும் விட்டு தந்து ஐந்து விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணிக்கு இந்த முறை துவக்க ஆட்டக்காரராக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் வந்து அதிரடியாக 24 பந்தில் அரை சதம் அடித்தார். மேலும் இறுதிவரை ஆட்டம் இழக்காமல் 28 பந்தில் 9 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர் உடன் 57 ரன்கள் எடுத்தார். பென் டக்கெட் 16 பந்தில் 25 ரன்கள் எடுத்தார். 7.2 ஓவரில் விக்கெட் இழப்பில்லாமல் 87 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. மேலும் இந்த டெஸ்ட் தொடரை 3-0 எனக் கைப்பற்றியது.

இதையும் படிங்க: கம்பீர் இந்த பையனை கை விட்ராதிங்க.. இப்படி உலகத்துல சில பேர்தான் இருக்காங்க – இர்பான் பதான் கோரிக்கை

டெஸ்ட் கிரிக்கெட்டில் மிஸ்பா உல் ஹக் 21 பந்தில் அரை சதம் அடித்தது அதிவேக அரை சதமாக இருக்கிறது. இதற்கடுத்து டேவிட் வார்னர் 22 பந்திலும், ஜாக் காலிஸ் 24 பந்திலும் அரை சதம் அடித்து இருந்தார்கள். தற்பொழுது இந்தப் பட்டியலில் பென் ஸ்டோக்ஸ் இணைந்திருக்கிறார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக அரை சதம் அடித்த இங்கிலாந்து வீரராகவும் சாதனை படைத்திருக்கிறார்.

- Advertisement -