நான் அந்த இந்திய வீரரை ஸார்னு கூப்பிடுவேன்.. ஏன்னா உலகத்திலேயே அவர் நேர்மையானவர் – பாக் சயித் அஜ்மல் பேட்டி

0
887
Ajmal

பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் சயித் அஜ்மல் இந்திய வீரர் ஒருவரை மிகவும் புகழ்ந்து பாராட்டி பேசி இருக்கிறார். மேலும் அந்த குறிப்பிட்ட இந்திய வீரரின் நடத்தைக்காக அவரை ஸார் என்று தான் கூப்பிடுவேன் என்று கூறியிருக்கிறார்.

பாகிஸ்தான் கிரிக்கெட்டில் சயித் அஜ்மல் வாழ்க்கை மிகவும் சர்ச்சைக்குரிய முறையில் முடிவுக்கு வந்தது. அவர் சுழல் பந்துவீச்சு வீசும் விதிகளுக்கு உட்பட்டு பந்து வீசவில்லை என ஐசிசி அவருடைய பந்துவீச்சை தடை செய்தது. இதன் காரணமாக மேற்கொண்டு அவரால் தன்னுடைய பந்து வீசும் முறையை மாற்றிக் கொள்ள முடியவில்லை. இதன் காரணமாக அவரது கிரிக்கெட் வாழ்க்கை பரிதாபமாக முடிவுக்கு வந்தது.

- Advertisement -

அதிரடியான கிரிக்கெட் கேரியர் ஆரம்பம்

வலதுகை ஆப் பின்னரான சயித் அஜ்மல் பந்துவீச்சு பேட்ஸ்மேன்களுக்கு விளையாடுவதற்கு மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது. குறிப்பாக அவர் வீசும் தூஸ்ரா யாராலும் கணிக்க முடியாத ஒன்றாக இருந்தது. இதனால் மிகப்பெரிய பேட்ஸ்மேன்கள் கூட அவரிடம் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்கள்.

2008 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி 2015 ஆம் ஆண்டு சர்ச்சைக்குரிய வகையில் அவருடைய கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. இதில் 35 டெஸ்ட் போட்டிகளில் 178 விக்கெட், 113 ஒருநாள் போட்டிகளில் 184 விக்கெட், 64 டி20 போட்டிகளில் 85 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்.

- Advertisement -

சச்சின் உலகிலேயே நேர்மையானவர்

இவர்களில் இந்திய லெஜெண்ட் சச்சின் டெண்டுல்கர் பற்றி சயித் அஜ்மல் கூறுகையில் “சச்சின் மிகவும் திறமையான கிரிக்கெட் வீரர். மேலும் உலகிலேயே மிகவும் நேர்மையானவர் மற்றும் கனிவானவர். அவர் ஒரு ஜாம்பவான். நான் அவரை ஸார் என்று அழைப்பேன். ஏனென்றால் அதற்கு அவர் மிகவும் தகுதியானவர்.

“கிரிக்கெட்டில் நீங்கள் விளையாட மைதானத்திற்கு செல்லும் பொழுது அங்கு தனிப்பட்ட முறையில் ஸார் என்று யாரும் கிடையாது. ஆனால் அவருடைய நடத்தியின் காரணமாக நான் அவருடன் விளையாடியதை மிகவும் மரியாதைக்குரிய ஒரு விஷயமாக கருதுகிறேன். அவரது விக்கெட்டை கைப்பற்றியது எனக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடியது. மேலும் நான் அவருடன் விளையாடும் போதெல்லாம் ஒரு மனிதனாக மட்டுமே இருந்திருக்கிறேன்”

இதையும் படிங்க : நடுவர் திடீர் முடிவு.. இங்கிலாந்து ஃபாஸ்ட் பவுலர் வோக்ஸ் ஸ்பின்னராக மாறினார்.. ரூல் என்ன சொல்கிறது?

“2010 ஆம் ஆண்டு நான் அவருடன் இணைந்து ஒரு லீக்கில் விளையாடினேன். அப்பொழுது அவர் இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சனுக்கு ஒரு தூஸ்ரா வீசி விக்கெட்டை வீழ்த்த சொன்னார். நானும் அப்படியே செய்ய அவர் மிகவும் மகிழ்ந்தார். மேலும் நான் நான்கு ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்க, அவரோ இருப்பது இன்னும் ஆறு விக்கெட்தான், நீங்கள் முன்கூட்டியே எல்லாத்தையும் கைப்பற்றி விடாதீர்கள் போட்டி நடக்கட்டும் என்று நகைச்சுவையாக என்னிடம் கூறினார். அவர் எப்போதும் ஒரு நல்ல மனிதர்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -