இந்திய அணி வீரர்கள் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் மோசமாக விளையாடியதன் காரணமாக தற்போது உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரசீத் லத்தீப் இந்திய வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுவது குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
கட்டாயப்படுத்தப்படும் இந்திய வீரர்கள்
இந்திய கிரிக்கெட் வீரர்கள் சமீபத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளிலும் அதற்குப் பிறகு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வி அடைந்து மோசமான விமர்சனங்களை சந்தித்தது வருகின்றனர். இந்த நிலையில் சிவப்பு பந்து கிரிக்கெட்டில் ஏற்பட்ட மோசமான தோல்வியினால் இந்திய அணி வீரர்கள் அனைவரும் உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் விளையாட வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டனர்.
இதன்படி இந்திய வீரர்களான ரோஹித் சர்மா மும்பை அணிக்காக ரஞ்சி தொடரில் விளையாடி வரும் நிலையில், அவரைத் தொடர்ந்து ஜடேஜா, கில் மற்றும் ரிஷப் பண்ட் போன்றோரும் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார்கள். மேலும் விராட் கோலி வருகிற 30-ஆம் தேதி ரஞ்சி டிராபியில் டெல்லி அணிக்காக விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவினால் இந்திய மற்ற வீரர்கள் அனைவரும் உள்நாட்டுத் தொடரில் விளையாட வற்புறுத்தப்படுகிறார்கள் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் சில காரசாரமான விஷயங்களை தெரிவித்து இருக்கிறார்.
விராட் கோலி ரோஹித் சர்மா மீது குறி
இதுகுறித்து ரசீத் லத்தீப் கூறும்போது “சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நிரம்பி இருப்பதால் இந்திய வீரர்களுக்கு உள்நாட்டு போட்டிகளில் விளையாடுவதற்கு நேரம் இருக்காது. தேவைப்பட்டால் மட்டுமே அவர்கள் உள்நாட்டு கிரிக்கெட் தொடர் விளையாட வேண்டும். ஆனால் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியைக் குறி வைப்பதால் மற்ற இந்திய வீரர்களும் உள்நாட்டுத் தொடரில் விளையாட வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.
இதையும் படிங்க:சாம்சனை இந்த மாதிரிதான் அவுட் பண்றாங்க.. இதை அவர் கவனிக்கலனா பெரிய சிக்கல் ஆகும் – ஆகாஷ் சோப்ரா பேட்டி
கடந்த காலங்களில் சச்சின் டெண்டுல்கரை தவிர அதிகமாக வேறு யாரும் உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் விளையாடவில்லை. விராட் கோலி மற்றும் ரோஹித் ஆகியோர் உள்நாட்டு தொடர்களில் விளையாடாமலேயே டி20 உலக கோப்பை மற்றும் ஒரு நாள் உலகை கோப்பையில் இறுதிப்போட்டி வரை வந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரு நாள் தொடரில் விளையாட உள்ளதால் அவர்கள் அதற்கு தயாராக இருக்க வேண்டும். ஏனென்றால் வெள்ளை பந்து கிரிக்கெட் முற்றிலும் வேறுபட்டது” என்று கூறி இருக்கிறார்.