சாம்சனை இந்த மாதிரிதான் அவுட் பண்றாங்க.. இதை அவர் கவனிக்கலனா பெரிய சிக்கல் ஆகும் – ஆகாஷ் சோப்ரா பேட்டி

0
286

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி பரபரப்பாக விளையாடி இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில்லான வெற்றியை பெற்றது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணி முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா சஞ்சு சாம்சன் ஆட்டம் இழந்த விதம் குறித்த சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

தடுமாறி வரும் சஞ்சு சாம்சன்

இந்திய கிரிக்கெட் அணி 5 டி20 போட்டிகள் கொண்ட இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரை முதலில் விளையாடி வருகிறது. இதில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது டி20 போட்டியிலும் இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இதில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக சற்று தடுமாறி வருகிறார்.

கடந்த ஆண்டு மூன்று சதங்கள் அடித்து அபாரமான பேட்டிங் ஃபார்மில் இருந்த நிலையில் இந்த ஆண்டு தொடக்கம் அவருக்கு சில சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக வேகப்பந்து வீச்சுக்கு எதிராக அவர் சற்று தடுமாறும் விதம் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா இடையே கேள்வியை எழுப்பி இருக்கிறது.

- Advertisement -

அவரை இப்படித்தான் அவுட் செய்கிறார்கள்

இது குறித்து அவர் கூறும் போது “கடந்த போட்டியில் அபிஷேக் ஷர்மா அவுட் ஆனார். ஆனால் அதற்கு முந்தைய போட்டியில் அவர் ரன்கள் குவித்து சிறப்பாக விளையாடினார். எனவே அவரை இப்போது பேசப்போவதில்லை. ஆனால் சஞ்சு சாம்சன் குறித்து இப்போது கவனிக்க வேண்டும். பந்து மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் வரும்போது சஞ்சு எப்படி செயல்பட்டார் என்பது குறித்து புள்ளி விவரங்களை எங்கள் புள்ளி விவர குழு வெளியிட்டுள்ளது. அவரது செயல் திறன் சாதாரணமாக உள்ளது, அவர் ரன்கள் எடுக்க வில்லை விக்கட்டையும் இழந்துள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் குறைவாக உள்ளது. அவர் க்ரீசுக்குள் ஆழமாகச் சென்று ஸ்கொயர் லெக்கை நோக்கி விளையாடச் செல்கிறார்.

இதையும் படிங்க:என்னை மக்கள் பாராட்டுனப்போ.. டீம் சீனியர்ஸ் வெறுத்தாங்க.. இந்த வினோத பிரச்சனை அங்க இருக்கு – பாக் முகமது ஷெஷாத்

பந்து வீச்சாளர்கள் அவருக்கு எதிராக பௌண்சர்களை வீசுகிறார்கள் மற்றும் மேலும் ஒரு ஃபீல்டரை டீப் திசையில் வைத்து அவருக்கு பொறி வைக்கிறார்கள். இரண்டு போட்டிகளில் அவர் அதே திசையில் அடிக்கச் சென்று அவுட் ஆனார். அது இப்போது பேசு பொருளாக மாறி உள்ளது. இந்தத் தொடருக்கு முந்தைய தொடரை பார்த்தால் அவர் ஐந்து போட்டிகளில் மூன்று சதங்கள் அடித்திருக்கிறார். அவருக்கு சதம் மற்றும் டக் அவுட் என கதை நடந்து கொண்டிருக்கிறது. தீவிர வேகப்பந்து வீச்சுக்கு எதிராக அவர் தடுமாறுகிறார். கஸ் அட்கின்சனின் 22 ரன்கள் ஓவரை நீக்கி விட்டுப் பார்த்தால் அவர் ரன்கள் எடுக்கவில்லை என்பதுதான் உண்மை. மேலும் வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் பவுன்சுக்கு எதிராக அவருக்கு சிக்கல்கள் உள்ளது” என்று கூறியிருக்கிறார்

- Advertisement -